
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் உருவக்கி அதனை முன்வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தும் நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரி மற்றும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் ஆகியோருடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்கள் அழிவிற்கு காரணமான மூன்று முக்கிய தலைவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையிலான எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயலுவது, ஆப்கானில் இருந்து அடுத்த வருடம் சர்வதேச படைகள் தமது மோதல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டதன் பின்னர் தாலிபான்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சிக்கல்கள் குறித்து விவாதித்தனர். நேட்ட்டோ நாடுகளின் தசாப்தம் கடந்த ஆக்கிரமிப்பு யுத்ததிலேயே தலிபான்கள் அழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிரியா போன்ற நாடுகளில் நேட்டோ நாடுகளே இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன.