மாவோயிஸ்டுகளால் கடத்திச்செல்லப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் ஏப்ரல் மாதம் 21ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். 12 நாட்களுக்கு பிறகு அவர் இன்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்.அவரது விடுதலையை சுக்மா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் தற்போது ஹெலிகாப்டர் மூலம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூர் அழைத்து வரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.