அலெக்ஸ் பால்மேனன் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்த அலெக்ஸ் பால் மேனனை இம்மாதம் 21ம் திகதி மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
தொடக்கத்தில் அவரை விடுவிக்க சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.
அப்பாவி கிராம மக்களை மாவோயிஸ்டுகள் என்று கூறி அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
அரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். 2-ந்தேதிக்குள் அவர் பத்திரமாக வந்து சேர்வார் என்று மாவோயிஸ்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை சத்தீஸ்கர் முதல்-மந்திரி ராமன் சிங்கும் உறுதி செய்தார். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது