இதே வேளை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசுடன் இணைந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்கிறார். பதவிக்காக அரசுடன் ஒட்டிக்க்கொள்ளும் இவர் போன்ற கொழும்புசார் வியாபாரிகளின் தலைமைகளே இதுவரை பல அழிவுகளுக்குக் காரணமாயினர்.
படுகாயமடைந்த 80 பேரில் பெரும்பாலானவர்கள் ,முஸ்லீம்களே என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 36 பேர் தர்ஹா நகர் வைத்திய சாலையிலும் ஏனையோர் பேருவளையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லீம்கள் மதம் என்ற அடிப்படையில் அல்லாமல் தேசிய இனம் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய தவிர்க்க முடியாத முரண்பாடாகிவிட்டது. இந்த அடிப்படையிலான போராட்டம் குர்திஷ் மக்களால் முன்னெடுக்கப்ப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் துப்ப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக இறுதியாகக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.