Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரச படைகளால் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கல் கைது

எ‌ன்.எ‌ல்.‌சி சுர‌ங்க‌ம் மு‌ன்பு ம‌றிய‌லி‌ல் ஈடுபட முய‌ன்ற 2 ஆ‌யி‌‌ர‌ம் ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
பணி நிரந்தரம், ஊதிய உய‌ர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை எ‌ன்.எ‌ல்.‌சி ஒ‌ப்ப‌ந்த தொ‌‌ழிலா‌ளர்க‌‌ள் கட‌ந்த 21 ஆ‌ம் தே‌தி முத‌ல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள‌ன‌ர்.
போராட்டம் இன்றுடன் 11வது நாளை எட்டியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், போரா‌ட்ட‌த்தை ‌தீ‌விர‌ப்படு‌‌த்து‌ம் ‌‌விதமாக நெ‌‌ய்வே‌லி எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌‌ழிலாள‌ர்க‌ள் 2 ஆ‌யிர‌ம் பே‌ர், ‌‌கியூ பால‌த்‌தி‌ல் இரு‌ந்து காலை ஊ‌ர்வலமாக செ‌ன்றன‌ர்.
அ‌ப்போது, சுர‌ங்க‌ம் மு‌ன்பு ம‌றிய‌‌லி‌ல் ஈடுபட முய‌‌ன்ற அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.
இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்களுக்கு மின்சாரம் வழங்கிவரும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பல்லாண்டுகளாக பணிபுரிந்து ஆண்டுதோறும் ஆயிரத்து ஐநூறு கோடிக்கும் மேல் லாபத்தையும் ஈட்டித் தந்துவரும் தொழிலாளர்களில், 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை மாநில, மத்திய அரசுகள் நன்கறியும்.
நாடு முழுவதிலும் நடைமுறையில் உள்ள சட்டப்படி, 2 ஆண்டுகளில் 240 நாட்கள் பணிபுரிந்திருந்தால், அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக ஏற்கவேண்டிய சட்டம் இருந்தும், 13,000 தொழிலாளர்களை, நிரந்தரம் ஆக்காமல் தொடர்ந்து வேலை வாங்கி வருவதோடு அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொழில் உறவும் இல்லை என்று முரட்டுத் தனமாக சட்டத்தை மீறி வருகிறது நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிர்வாகம்.
சட்டப்படி எங்களை நிரந்தரத் தொழிலாளர்கள் என ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனநாயக முறையில் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 10வது நாளாக வேலை நிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவராமல் நீடிப்பது வேதனைக்குரியது.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் மத்திய அரசின் நேரடி நிர்வாகப் பொறுப்பில் உள்ள பொதுத்துறையைச் சேர்ந்த, உற்பத்திக்குத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்து தரும் நிறுவனமாகும், மின் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையில், அங்கு தொழில் அமைதிகுலைவது நல்லதல்ல. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வைத்துள்ள கோரிக்கை சட்டப்படி
மறுக்க முடியாத அடிப்படை உரிமையாகும்.
எனவே, இது தமிழ்நாட்டில் இயங்கி வருவதால், தமிழக அரசு, குறிப்பாக முதல்வரே தலையிட்டு, தொழிலாளர்களின் சட்டப்படியான கோரிக்கையை நிறுவனத்தை ஏற்கச் செய்து மின் உற்பத்தி தடங்கலின்றி நடைபெற, இந்த ஆண்டு மே தின நற்செய்தியாக முதல்வர் வேலை நிறுத்தத்தை முடித்திடவும், தொழிலாளர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப்
பெற்றிடவும் உரிய நடவடிக்கை எடுத்து மே தின வாழ்த்தாக அறிவித்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தா.பாண்டியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version