Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரச உளவாளி கே.பியின் அரச ஆதரவுப் பிரசாரம் – காணொளி

இலங்கை அரசு பதினைந்தாயிரம் கைதிகளை எங்கு வைக்கப்படிருகிறார்கள் என்று தெரியாமலே சிறைக்கூடங்களில் அடைத்துவைத்திருக்கிறது. அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கைப் பிரதமர் கைதிகளை விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார். அவர்களை விடுதலை செய்வது ஆபத்தானது என கருத்துத் தெரிவித்த அவர் முகாம்களிலேயே பல விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாகக் கூறுகிறார்.
இவ்வாறு இனச்சுத்திகரிப்பு ஒன்றைத் திட்டமிட்டு நடத்தி வரும் இலங்கை சோவனிச அரசு தனது பாசிச முகத்தை மறைப்பதற்காக அணிந்து கொள்ளும் முகமூடி தான் சில காட்சிக் கூடங்கள். அவ்வாறான காட்சிக் கூடங்களில் குறித்த் தொகைக் கைதிகளை மறுவாழ்வு வழங்குவது போல் பராமரிக்கின்றனர். ஊடகங்களில் வெளியிடவும், உரிமை அமைப்புகளுக்குக் காண்பிக்கவும் அவ்வாறான நிலையங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களை காட்சிப்படுத்திக்கொண்டு ஏனையோரை அழிக்கும் இலங்கை அரச பாசிசம் தொங்குதசைகளை இங்கு காணலாம்.
கே.பி என்ற இலங்கை அரச உளவாளிகளோடு அவரின் எடுபிடிகளான சார்ள்ஸ் அன்டனிதாஸ், விமலதாஸ்,  பேரின்பநாயகம் உட்பட ஏனையோர் இலங்கை அரசின் ஊதுகுழல்களாகத் தொழிற்படுவதைக் காணலாம்.


அரச உளவாளி கே.பியின் அரச ஆதரவுப் பிரசாரம்

இதில் ஒரு படி மேலே சென்று  அரசாங்கம்  கைதிகளை அடைத்து வைத்திருப்பதை நியாயப்படுத்தி  இனப்படுகொலை நிகழ்த்திய மகிந்தவிற்கு நன்றி கூறுகிறார்.   கைதிகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்  என்ற குறைந்த பட்ச விபரங்களைக் கூட வெளியிட மறுக்கும் இலங்கை அரசிடமிருந்து  அவற்றைப் பெற்றுக்கொள்கின்ற அளவிற்க்குக் கூடப் பேச மறுக்கும் இந்தத் தொங்குதசைகள்  தமிழ்ப் பேசும்  மக்களின்  சாபக்கேடு.

Exit mobile version