வட இந்தியா போன்று சாதிக் கொடுமைகள் தமிழகத்தில் இல்லாத போதும் இப்போது தமிழகத்திலும் மீண்டும் சாதி வெறிக்கொடுமைகள் மேலோங்கி வருகிறது.
தலித்துக்கள் இந்தியாவில் ஜனாதிபதி ஆன போதும் சாதாரண ஊராட்சி பதவிகளில் தலித் மக்களால் அமர முடியாத அளவு கொடுமைகள் நடக்கிறது. பல இடங்களில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாதி வெறி இந்துக்களால் தரையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றும் தலித் ஊழியர் ஒருவரை தன் சாதியின் பெயரால் காலில் விழ வைத்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.
கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கோபால்சாமி என்பவர் தனது சொத்து விபரங்களை சரிபார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை அலுவலகம் வருகிறார். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச் செலவி ஆவணங்கள் சரியில்லை சரியான ஆவணம் கொண்டு வருமாறு சொன்னதாகவும் அதற்கு கோபால்சாமி கலைச் செல்வியை தகாத வார்த்தைகளில் பேச அப்போது குறுக்கிட்ட முத்துசாமி நிர்வாக அலுவலரை தவறாக பேச வேண்டாம் என்று சொல்ல ஆத்திரமடைந்த கோபால்சாமி அவர் சாதியைக் குறிப்பிட்டு “நான் நினைத்தால் நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது என் காலில் விழுந்து மன்னிப்புக் கேள் உன்னை விட்டு விடுகிறேன்” என்று சொல்ல இதனையடுத்து கோபால்சாமி காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்புக் கேட்கும் விடியோ வெளியானது.
இது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்த கோவை மாட்ட ஆட்சியர் மற்றும் வாருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது இனிதான் தெரியவரும்.