Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசுப்பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஓட்டுநர் நடத்துனர் கைது!

நகர்ப்புற அரசுப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்காலாம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவு நிலவிய நிலையில் ஆங்காங்கே பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களின் நடவடிக்கை சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்தில் இருந்து இறக்கி விட்டது. குறவர்களை இறக்கி விட்டது என பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவரை அரசுப் பேருந்திலேயே கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பேருந்தின் நடத்துனர் சிலம்பரசன் மீது பலாத்காரம் செய்யும்  நோக்கொடு பெண்ணை கடத்துதல், தப்பிக்க விடாமல் தடுத்தல் பாலியல் தொந்தரவு என பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுளது. அதே போன்று அன்புச் செலவன் என்ற பேருந்து ஓட்டுநர் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக  வழக்குபதியப்படு  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சமப்வம் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையை சுற்றரிக்கையாக அனுபியுள்ளார்கள்.

Exit mobile version