மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உத்தர பிரதேச மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மை செயலர் தீபக் சிங் சிங்கால் உட்பட பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடியின் அரசு அனுமதியளித்துவிட்டு கோவில்களில் பாதுகாப்பை அதிகரிப்பதும் வன்முறையைத் தூண்டுவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரோபாயம். பிரபலமான மதவழிபாட்டுத் தலங்கள் உள்ள இந்த மூன்று நகரங்களிலும், அதிக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை பொருத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், மூன்று நகரங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் பிரிவுகளை பணியில் ஈடுபடுத்துவது என்றும், 24 மணி நேரமும், பாதுகாப்புப் படையினர் ஈடுபாட்டோடுபணியாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமாம்
