அம்பேத்கர் தந்த பகுத்தறிவு : டென்சி
இன்று ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் தமது பொருளாதார நலன் கருதி புலம் பெயர்ந்து சென்ற மக்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உயர் பதவிகளில் அமர்திருக்கிறார்கள். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு, இனத்திற்கு, மதத்திற்கு எதிரான நாடுகளின் மீதான வன்மத்தை தாம் அமர்ந்துள்ள பதவியை துஸ்பிரயோகப்படுத்தி தீர்க்கிறார்கள் என்பதனையும் நாம் அவதானிக்க முடியும். அத்துடன் தாம் செய்யும் ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களை மறைப்பதற்கும் தாம் அப்பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கும் இன, மத, நிற மற்றும் மனித குலத்திற்கு எதிராக எதனை வேண்டுமானாலும் செய்ய துணிகிறார்கள் என்பதனை இவர்களின் செய்கைகளை கூர்ந்து கவனித்தால் அவதானிக்க முடியும்.
இந்துத்துவ தீவிரவாதம், அகண்ட பாரதம் எனும் கனவை தாமடைய வெற்று கோசத்துடன் இயங்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் செயல்களை உதாரணமாக கொண்டால் இவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்யும் வன்ம செயல்களே உலகலாவிய இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம், இனப்படுகொலைகள், உலகலாவிய யுத்தங்களிற்கும் அடிப்படை காரணம் எனலாம். மற்றும் இதே இந்து தர்மம் இந்து தர்மம், அன்பே சிவம் என கூவும் இதே இந்துத்துவ தீவிரவாதிகளே உலக சாமாதானத்தினதும் அமைதியினதும் முதல் எதிரிகளாக இருக்கின்றனர். இவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனைகளில் குளிர் காய்கின்றதுடன், தமது நாட்டினை அழித்துகொண்டு முழு உலகினையும் அழிக்கின்றனர். இந்துத்துவ தீவிரவாதிகளின் இச்செயல்பாட்டினால் இன்று சகோதர இனமாக வாழ்ந்த, ஓர் அமைதியான சிறப்பான உலகினை அமைக்கும் பலம் கொண்ட, கிறிஸ்தவ இஸ்லாமிய மற்றும் யூத மக்கள் ஒருவருக்கு ஒருவர் கொல்வது கவலைக்குரியது.
ஒரு நாட்டவன் இன்னொரு நாட்டில் தான் படித்தவன் என்று பதவியில் அமர்ந்து கொண்டு, தங்களது நாட்டிற்கு எதிரான நாடுகளின் மீதான வன்மத்தினை தீர்க்கும் போது உலகில் சமாதானமோ, அமைதியோ உழைக்கும் மக்களிற்கான உரிமைகளோ ஒருபோதும் கிடைக்கமாட்டாது. வர்க்கப் பிரச்சனைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்க இந்த புற்றுநோயும் ஒரு காரணி எனலாம். முதலாளித்துவத்தின் கோரப்பற்களாக இவ்வன்மமே வெளிப்படுகின்றது. இன்று உலகின் மேலைத்தேய நாடுகளின் பதவிகளை துஸ்பிரயோகம் செய்து கொண்டு சீன எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, யுத்தங்கள் என்று தாமும் வல்லரசாக வேண்டும் என்று விசர்கூத்தாடும் இந்துத்துவா எனும் தீவிரவாதம் முதலில் களையப்படவேண்டும். காஸ்மீர் பிரச்சனையால் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட இந்திய அதிகாரிகளும், மேற்கத்தைய நாடுகளின் பதவிகளை அலங்கரிக்கும் இந்திய வம்ச அதிகாரிகளும் தமது கடமைகளை செய்வார்களா? அல்லது உலகில் சமாதானத்தைதான் விரும்புவார்களா? இவ்வாறான அம்பானி அதானி மற்றும் இந்து மத ஒரு பாரதம் இருப்பதிலும் அது ஒவ்வொரு நாடாக பிரிவது மேன்மை தரும்.
அமைதி என்பதைச் சீர்குலைக்கும் அதிகாரவர்க்கத்தினதும் அரசுகளதும் வன்முறை களையப்பட வேண்டும். தவிர, அன்னியர்களின் உள்ளீட்டுடன் கூடிய அதிகாரவர்க்க உருவாக்கம் தடுக்கப்பட வேண்டும். மற்றைய மத, நாட்டவர்கள் மீதான வன்மத்துடன் வாழும் இவர்கள் அரசுகளை தமது சொந்த வீட்டு “க்க்கூஸ்” போன்று பயன்படுத்துவதே சகல பிரச்சனைகளின் அடிப்படை காரணமாகும். மற்றையவனுடைய குட்டையை குழப்பி மீன் பிடிக்ககூடாது என்பதை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும்.
<