நியூயோர்க் சிட்டியிலிருந்து 60 மைல் தொலைவில் அமைந்துள்ள நியூ ரவுன் என்ற இடத்திலேயே இந்த பாடசாலை அமைந்துள்ளது. கறுப்பு உடையணிந்த துப்பாக்கி ஏந்திய மனிதன் பல துப்பாக்கிகளுடன் பாடசாலைக்குள் அமரிக்க நேரப்படி காலை 9.30 இற்கு நுளைந்து 26 உயிர்களைப் பலியெடுத்துவிட்டு தான்னையும் சுட்டுக்கொண்டு மாண்டுபோனான்.
கொலையாளியின் தாயார் அதே பாடசாலையில் ஆசிரியராக வேலை செய்தவர் என்றும் அவர் கொலையாளியின் வீட்டில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்றும் போலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
கொலையாளியான அடம் லன்ஸா முதலில் தாயாரைக் கொலைசெய்துவிட்டு குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று அங்கு ஏனையோரைக் கொலைசெய்ததாக தகவல்கள் கூறின. 20 வயதான ரயனின் தாயாரான நான்சியின் கொலையை அறிவித்த பின்னர் கொலையின் பின்னணி குறித்து மேலும் ஆராய்வதாகக் அமரிக்கப் போலீசார் கூறினர்.
உலகம் முழுவதும் மனிதப்படுகொலைகளை நிகழ்த்தும் அமரிக்காவின் பிரசை ஒருவருக்கு மனிதப் பெறுமானங்கள் குறித்த பிரக்ஞை அருகி வருகின்றது. தாம் சார்ந்த பல்தேசிய முதலைகள் பணத்தை விழுங்குவதற்காக உலகம் முழுவதும் இரத்த ஆற்றை பெருக்கெடுக்கச் செய்யும் அமரிக்காவின் பொது மனிதனுக்கு மனிதாபிமானம் அருகி வருகிறது. இளைய சமுதாயம் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்குப் பழக்கப்பட்டிருக்கிறது.
சினிமா தொலைக்காட்சி போன்ற அமரிக்க ஊடகங்கள் வன்மத்தையும், பயங்கரவாதத்தையும், கொலைகளையும் நியாயம் எனக் கற்பிக்கின்றன. வன்முறையை சமூகத்தின் மேலுள்ள அனைத்திலும் பொதுப் புத்தியாக வளர்த்து வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். அமரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளிங்டன் கடாபி என்ற வயதான மனிதரை இறைச்சித் துண்டம் போல தெருக்களில் வீசியெறிந்து விளையாடியதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்து குழந்தைகளுக்கு பயங்கரவாததை நியாயப்படுத்தினார்.
அமரிக்க அதிகார வர்க்கம் உலகம் முழுவதும் நியாயம் என விதைத்த வன்முறையை இன்று அந்த நாட்டின் மக்கள் அறுவடை செய்கிறார்கள். கொலை நடந்து முடிந்ததும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தாம் செயற்பட்டு கொலைகளை நிறுத்தப்பொவதாக அமரிக்க சனாதிபதி ஒபாமா தெரிவிக்கிறார்.
அவர்கள் உலகம் முழுவதும் நடத்துகின்ர சாரி சாரியான கொலைகளே குழந்தைகளுக்கு கொலைகள் நியாயம் என சொல்லிக் கொடுக்கின்றன.
இலங்கை உட்பட தெற்காசியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளும், கொலைகளை நியாயப்படுத்தும் இந்தியத் திரைப்படங்களும், அமரிக்க வன்முறைக் கலாச்சரத்தை நேரடியாகவே விதைக்கும் தொலைக்காட்சிகளும் இந்தியா, இலங்கை உட்பட்ட தெற்காசிய நாடுகளில் அடம் போன்ற பல கொலைகாரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.