Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்துல் கலாமைச் சந்த்தித்து பாக்கியம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது.
இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பல்ல.  ஏனையநாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இந்திய அதிகார வர்க்கத்தின் அடியாளான அப்துல் கலாம், இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்விற்கு அங்கீகாரம் தேடும்நோக்கத்தின் அடிப்பையில் இலங்கையில் வலம்வ்ருகிறார் என்ற குறைந்தபட்ச அரசியலைப் புரிந்துகொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாக்கியம் செய்தவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.
இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்த தமிழர், சிறந்த விஞ்ஞானி என்ற வகையில் அப்துல் கலாமை சந்தித்தமையானது பாக்கியம் என்று கருதுவதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இவ்வாறான பெரியவர்களின் விஜயம் யாழ்ப்பாணத்துக்கு கிடைத்தமை பாக்கியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version