இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ மத நிறுவனங்களில் தொண்டு அமைப்புகளுக்கு இந்திய அரசு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. சமீபத்தில் அமைப்பு வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கான அனுமதியை ரத்து செய்தது. எதிர்மறையான கருத்துக்கள் அன்னை தெரசா தொண்டு நிறுவனங்கள் தொடர்பாக வருவதாக உள்துறை அமைச்சகம் தடை விதித்திருந்தது.இது உலக அளவில் இந்திய உள்துறை அமைச்சகம் மீது விமர்சனங்களை உருவாக்கியது.
இந்தியாவில் செயல்படும் அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்து நன்கொடைகள் பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின்படி உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
இந்நிலையில், சுமார் 6,000 நிறுவனங்கள் அந்த உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் அவற்றின் விண்ணப்பங்களை நிராகரித்திருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஏற்கனேவே 6,587 அரசு சாரா நிறுவனங்களின் உரிமம் நிறுத்தப்பட்டது. எனவே, சுமார் 12,000-க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் சென்று ஆண்டு இறுதியில் காலாவதியாகின. அவற்றில் ‘தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி’ அமைப்பும் அடக்கம்.