Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனைத்து சாதி பெண்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் இதுவரை பரம்பரை வழக்கப்படி பிரமாணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசு உத்தரவுப்படி உரிய பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவார்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் பிரமாணர்கள் உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்ற நிலையில், 10 ஆண்டுகள்  கழித்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இன்னும் நூறு நாட்களுக்குள் அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவார்கள். என்பதை தமிழக அரசு அறிவித்து விட்ட நிலையில் இன்று இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதில்,

“அனைத்து சாதி ஆண்களையும் அர்ச்சகர்கள் ஆக்குவது போல அனைத்து சாதிகளையும் சேர்ந்த பெண்களையும் அர்ச்சகர்கள் ஆக்குவோம். இதில் விரும்பி இணையும் பெண்களுக்கு ஆகம விதிகளின் படி உரிய பயிற்சி கொடுத்து கோவில்களில் அர்ச்சகர் பணிகளுக்கு அமர்த்துவோம்” என்றார்.

தமிழக சமூகநீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல் அறிவிப்பு என பார்க்கப்படுகிறது.

Exit mobile version