Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனுமதிப்பத்திரம் இல்லாமல் நடத்தப்பட்ட சிவாகசி ஆலையின் மனிதப்படுகொலைகள்

சிவகாசியில் ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக் கூறி அதன் உரிமம் அண்மையில் ரத்து செய்யப்பட்டும் அது இயங்கி வந்துள்ளது.
தீவிபத்து ஏற்பட்டு 38 பேரின் உயிரை காவு வாங்கிய ஓம் சக்தி பட்டாசு ஆலை சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசனுக்கு சொந்தமானது. இந்த ஆலை வளாகத்தில் ஓம்சக்தி ப்ளு மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்துள்ளார். கடந்த 23ம் தேதி சிவகாசி வெடிமருந்து கட்டுப்பாட்டு துணை தலைமை அலுவலர் ராமசாமி தலைமையிலான குழு ஓம் சக்தி பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து விதிமீறல்கள் அதிகம் உள்ளதை கண்டுபிடித்தது.
அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிநது பட்டாசு ஆலையின் உரிமத்தை ராமசாமி ரத்து செய்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உரி்மத்தை ரத்து செய்ததோடு மட்டுமின்றி விதி்முறைகளை காரணம் காட்டி பட்டாசு ஆலையை சீல் வைத்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆய்வு மேற்கொண்ட அதிகாரியின் கவனக்குறைவு தான் இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நெஞ்சை பதறவைக்கும் பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:
1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பல
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பல
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பல
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பல
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர், நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர், சிவகாசியில் 3 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பல
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பல
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பல
ஆக மொத்தம் கடந்த 14 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் கிட்டத்தட்ட 300 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மனித உயிர்கள் தொடர்ச்சியாகக் காவுகொள்ளப்பட்டாலும் அருவருப்பான பண வெறியர்கள் அதிகாரத்திலிருக்கும் இந்திய ‘ஜனநாயகம்’ வெறும் கோப்ரட் வியாபார ஜனநாகம் மட்டும் தான் என்பதை உலகமக்களுக்கு இன்னொரு தடவை சொல்லிவைத்திருக்கிறது.

Exit mobile version