Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்!

anandha-Krishnan
அனந்த கிருஷ்ணன்

முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கலாநிதி மாறன் மற்றும் ஆறு பேருக்கு இந்த அழைப்பணையை அனுப்பி வைத்தது. இந்திய நிறுவனமான Aircel இற்கும் மலேசியத் தமிழரான அனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் (Maxis) இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் தொடர்பாகவே இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியாவின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான CBI இன் விசாரணைகளின் போது கலாநிதி மாறன் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோரைக் குற்றம் சுமத்தியிருந்தத்து.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன் உட்பட ஏனையோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அழைப்பாணையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனந்த கிரிஷ்ணன் இன் தாய் தந்தையர் யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா சென்று குடியேறியவர்கள். மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான அனந்த கிருஷ்ணன் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் பெரும் பணமீட்டியவர். புலம்பெயர் நாடுகளில் தொலைக்காட்சி சேவைகள் இயங்கும் அஸ்ரோ செய்மதி அனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமானதே.

இதற்கும் மேலாக இலங்கை தொலைத் தொடர்பு சேவையில் (Sri Lanka) 45 வீதமான பங்குகளை அனந்த கிருஷ்ணனே சொந்தமாக வைத்திருக்கிறார்.

சிறீ லங்கா ரெலிகொம் இன் முகாமையாளர்களில் ஒருவர் ஷமிந்த ராஜபக்ச. ராஜபக்சவின் பெறாமகனான ஷமிந்த இலங்கையின் சக்திமிக்க மனிதர்களில் ஒருவர். சிறீ லங்கா ரெலிகொம் இன் நிர்வாகத்துறைக்குள் நுளைந்து அதனைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு லைக்கா நிறுவனம் ராஜபக்ச குடும்பத்திற்குப் பயன்பட்டது.
ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை 2006 ஆம் ஆண்டில் லைக்காவுடன் இணைந்து உருவாக்கி அதனூடாக தனது குடும்பத்தினரை சிறீலங்கா ரெலிகொம் இல் இணைத்துக்கொண்ட ராஜபக்ச இன்று உலகின் பலம் மிக்க ரெலிகொம் முதலீட்டாளர்களாகியுள்ளனர்.

அனந்த கிருஷ்ணன் சிறீ லங்கா ரெலிகொம் இன் 45 வீதப் பங்குகளை வாங்கிக்கொண்ட பின்னர், இலங்கை மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் தெற்காசியாவிற்கான ரெலிகொம் சந்தியாக மாறியது. ஐரோப்பாவில் பிரித்தானிய ரெலிகொம் இன் கடலடிக் கேபிள்களின் மையமாக உருவாகியது போன்று இலங்கை இப்போது மாறி வருகிறது. கிழக்காசியா, மத்திய கிழக்க்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை இணைக்கும் தொலைத் தொடர்பு, இன்டர்னெட் சந்திப்புப் புள்ளியாக இலங்கை மாற்றமடைந்திருப்பதுடன், அவற்றின் முகாமைத்துவத்தையும் சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே கவனித்துக்கொள்கிறது. இதனால் தான் லைக்கா உட்பட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ராஜபக்சவின் காலைச் சுற்றிச் சுற்றி வலம் வருகின்றன.

தயாநிதி மாறன், லைக்கா, அனந்த கிருஷ்ணன், ஐரோப்பிய நாடுகள் என்ற இத்தியாதிகள் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டதன் பின்புலத்தில் கடலடி தொலைத்தொடர்பும் ஒன்று என்பதறான ஆதாரம் இதற்கு மேல் தேவையற்றது.

இப்பின்னணி தொடர்பான ஆய்வுகள் இனியொருவிலும், இனியொரு தாக்கப்பட்டால் வேறு வழிகளிலும் மக்களைச் சென்றடையும்.

Exit mobile version