Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு அதிமுக 21 தொகுதிகள் ஒதுக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.கடந்த சில நாட்களாகவே சென்னை நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பாஜக இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் பாஜக 60 தொகுதிகள் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அம்மா மக்கள் முன்னெற்றக்கழகத்தையும் அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பா.ஜ.க. குழுவினர் நேற்று காலை சந்தித்து பேசினர்.


இதற்கிடையே, நேற்று இரவு காரைக்கால், விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.மீண்டும் இன்று பாஜக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ள கோவை, கன்னியாகுமரி, வேலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இந்து மதத்தினர் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறலாம் என்ற கணக்குடன் பாஜக களமிரங்குகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை என்றாலும் இன்னும் இரு நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version