“முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்!”
சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.
(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)
(1)
இலங்கைச் சிறுபான்மை இனங்கள் ஒரு சிக்கலான காலக்கட்டத்துக்குள் புதிய ஆண்டில் நுழையப்போகிறார்கள்.இலங்கை அரச ஆதிக்கத்தின்-
இன்றைய இந்தத்(புலிகளது தேசியவிடுதலைப்போராட்ட தோல்விக்குப்பின்) தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்தமிழ்மக்களது அரசியல் சக்திகளால் நிகழவில்லை. இதற்கானவொரு “பொதுச் சூழலை”எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும், இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,ஒடுக்கப்படும்-நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை மக்களினங்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும். இந்தத் தருணத்தில்தாம் அதிகாரம் குறித்துப் பரவலாகப் பேசுவதற்கு நண்பர்கள் முனைகிறார்கள். அவர்களும் அதிகாரங் குறித்துப் பேசுவதில் பூப்காவை-நீட்சேயை முன் தள்ளி ஒற்றை வார்த்தை உதிர்ப்பதில் இடதுசாரியப் போராட்டத் திசையமைவுகளையே நொருக்குவதாகக் காட்சிப்படுத்தியும் விடுகிறார்கள்.மார்க்சை-லெனினைச் சொல்லி இக் கட்டுரைத் தொடரை நான் நகர்த்தப் போவதில்லை!
அதிகாரம் குறித்தும்,நிலவும் இலங்கை அரச இனவொடுக்கு முறையும்,அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்தின்வழி அதிகாரத்தை நிலைப்படுத்தும் சிங்கள-தமிழ் அதிகார வர்க்கங்களின் சட்டரீதியான அதிகாரத்துவ மையங்களை நோக்கி,எதிர் போராட்டங்கள் தனக்கான அதிகாரத்துக்குட்பட்ட வகைகளில் எழுவேண்டிய தருணங்களைப் புரிந்துகொள்வதற்கும் நாம் கடக்கவேண்டிய தூரம் அறிவுப் பாதையின்வழி நீண்ட தூரமாகும்.
புலிவழியான போராட்டச் செல்நெறியானது மக்களது செழுமையான பலத்தைப் பொருட்படுத்தாதென்பதை முதன்மைப்படுத்திச் சொல்வதிலும்,ஒருவகையான அந்நிய “கூறுபோடும்” தந்திரத்தையுரைப்பதாகப் புரிந்துகொள்ளச் சொல்லித் தொடரலாம்.
“Macht,Herrschaft, Gewalt.”-அதிகாரம்,ஆதிக்கம்,வன்முறை போன்றவைகளின் வரலாற்று ரீதியான கண்ணோடத்தைக் குறித்தான புரிதல்களை அவசியப்படுத்துகிறேன்.இதற்காக மக்ஸ் வேபர் எழுதிய உலக தழுவிய கண்ணோட்த்துள் அதிகாரத்துவ வடிவங்கள்: சட்டரீதியான அதிகாரத்துவ அலகுகளும் (Herrschaftsformen in universeller historischer Perspektive –
Max Weber: Typen der legitimen Herrschaft) பரவலாகப் புரியப்பட்ட பின்னணியோடு நான்வொல்வ்காங் சோவ்ஸ்கியின் அதிகாரம் என்பது சமூக வடிவங்களாக என்பதை புதிய வகையான தேடதலின் வகைப்பட்ட கருத்தாடலுக்கும் (Macht als soziale Figuration – Wolfgang Sofsky u. Rainer Paris: Figurationen sozialer Macht ) எடுத்தாள்வதில் இலங்கையின் இனவொடுக்குமுறைத் தகவமைப்புகளை விளங்கிக்கொள்வதற்காக நவலிபரல்களது அதீதமான அதிகாரவேட்கையின் சூட்சுமத்தை விளங்கிக்கொள்வதற்கு மிக்கேல் பூவ்கா குறிரைத்த:
„Die Macht ist nicht etwas, was man erwirbt, wegnimmt, teilt, was man bewahrt oder verliert; die Macht ist etwas, was sich von un-zähligen Punkten aus und im Spiel ungleicher und beweglicher Beziehungen vollzieht.“-Michel Foucault[Überwachen und Strafen]
//Capillary power, governmentality, bio – politics குறித்து மேற்கத்திய சூழலை முன்வைத்து ஃபூக்கோ விளக்கியவற்றை விளங்கிக் கொள்ள முற்பட்டு, அதன்பாற்பட்டு புலிகளின் “வன்முறை” குறித்து பேச முன் வந்தால் வரவேற்கலாம்!மேற்கத்திய சூழலில் ஃபூக்கோவும் இன்ன பிறரும் முன்வைத்த ஆய்வுகளை தெற்காசியச் சூழலின் தனித்துவங்களைக் கணக்கில் கொண்டு புரிந்துகொள்ளப் பிரயத்தனப்பட Bernard Cohn ஐயும் Nichols Dirks ஐயும் வாசித்திருக்க வேண்டும், அறிவு வாளிகள் போல பாவனை செய்யும் …!//
by Valar Mathi
அதிகாரமென்பது கையகப்படுத்தி,பகிர்ந்துகொள்வதற்கான அலகு போன்றிருக்க வாய்ப்பில்லை,மனிதர்கள் காத்துக்கொள்வதற்கும்,இழப்பதற்கும்.அதிகாரமானது சமனற்ற விளையாட்டில் எண்ணிக்கைக்குட்படாத பல புள்ளிகளைக் கொண்டிருப்பதையொத்த தன்மைக்குட்பட்டிருக்கிறது. இது, சாதகமானதாகவும்,பாதகமானதாகவுமே இருபக்கங்கங்கட்கு உட்பட்டிருப்பதாகக் கருதும் பூப்கா வரலாற்று ரீதியாக உருவாகிய அதிகாரமென்பதை ஒரு ஸ்த்துலாமான புள்ளியில் நிறுவுவதை மறுத்துரைக்கும் சந்தர்பங்களை விளங்கிக்கொள்வதற்காக நாம்அவரது அனைத்துப் பிரதான எழுத்துப் பதிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு தொடருவதும் தவிர்க்கமுடியாத ஒரு பளுத்தாம்.நவலிபரல்களின் முக்கிய மேட்டிமைக் கூட்டணியுள் -மௌன் பிலெரின் செசைட்டியுள் [Mont Pelerin Society ]அதிகாரத்துக்கான அதீத முனைப்புகள் திரண்டிருந்தபோது,கார்ல் போப்பரோடு[Karl Popper] கூடித் திரிந்த ஜேர்மனிய சந்தைப் பொருளாதாரச் சிந்தனையாளன் லூவிட்க் ஏர்ஹார்ட்டும் [Ludwig Erhard ],பிறீட்டிறிக் ஹாய்க்ட்டும்[Friedrich August von Hayek ] பூப்காவை மதித்தேம்பியழைத்திருந்தபோது அவரது அதிகாரம் குறித்த சிந்தனைதாம் அதன் அர்த்த புஷ்டியான வாய்ப்பை நல்கியது.வரலாற்றுக்கட்டமான புரிதலைச் செழுமைப்படுத்துவதிலிருந்து அதை அரூப நிலைக்குத் தள்ளியதிலிருந்து அதிகாரம் என்பது பல தளத்திலிருந்து:
Historische und gesellschaftliche Prozesse folgen für Michel Foucault keiner inneren Entwicklungslogik und ihnen liegt daher auch keine sinnhafte Ordnung zugrunde. Sie sind vielmehr das Ergebnis von andauernden Machtkämpfen. Für Foucault ist Geschichte “Machtverhältnis, nicht Sinnverhältnis” (M. Foucault: Dispositive der Macht, Berlin 1978, S. 29).
வரலாற்று ரீதியான சமூப் படிமுறைவளர்ச்சியானதன் விளைவுகள் பூப்காவைப் பொறுத்தவரை உள் தர்க்கத்துக்கு உகந்ததல்ல.அதேவழியில் அடிப்படையான அர்த்தத்துக்கு உட்பட்டதுமல்ல என்றாகிறது.இவைகள் அதிகம் பேசுவதானால்,தொடர்ந்து நிலவும் அதிகாரத்துக்கான போராட்டத்துள் சில வெளிப்பாடுகள் மட்டுமே.இந்தப் புள்ளியில் தாம் நாம் புலிகளது அதிகாரத்தைப் புரிந்துகொள்ள முனையவேண்டுமெனச் சொல்லப்படுகிறதுபோல் தெரிகிறது.இதை நாம் புரிந்துகொள்வதும்,தொடரும் அதிகாரத்திசையமைவுகளை மிகக் கறாராக வரையறை செய்வதில்இலங்கை அரச ஆதிக்கத்தின் வழி நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது வாழ்வாதாரவுரிமையைப் பின் தள்ளுவதிலிருந்து அவர்களது சுயநிர்ணயத்துக்கான அதுசார்ந்த உரிமைக் குரல்களை ஓரங்கட்டியொதுக்குவதில் புலிகளது எதிரதிகாரத்தின் வினை பயன் என்னவென்பதைக் குறித்துப் பார்ப்பதில் அவசியமான தேடுதல்கள் உருவாக வேண்டுமெனவும் கோருகிறேன்.
//ஃபூக்கோ கொடுத்த தெளிவுகளில் அடிப்படையான ஒன்று, அதிகாரம் என்பது “அரசு” என்பதாக இடதுசாரிகள் கற்பனை செய்துகொண்டிருக்கிற அரசு எந்திரம் என்று சொல்லப்படுவதின் ஒன்றில் மட்டுமே குவிந்திருப்பன்று என்பதுவும்!
இந்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாத மாற்றுக் கருத்தாளர்கள் இனவெறி அரசுக்கு எதிராகச் செயல்பட்ட ஒரு இயக்க்கத்தை “அதுவும் அதிகார மையச் செயல்பாடுதான்” என்று விமர்சிப்பதில் அடிப்படைக் கோளாறு இருக்கிறது!முதல் கோளாறு, அதிகாரம் என்பது “பிற்போக்கானது – அதனால் எதிர்க்கப்பட வேண்டியது” என்ற மடப்புரிதல்.//
by Valar Mathi
எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே, பாசிசப் புலிவழிப் போராட்டத்தைக் கற்பனை செய்யவேண்டாம்) இழந்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக் கப்படவேண்டும். இங்கே, புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும்.இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது.மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே! மக்கள் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது. எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை,அந்நிய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் புவிகோள நலனை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.
இதன்தொடர் புரிதலில்தாம் இந்த அதிகாரம் குறித்த புரிதலை மிக நுணுக்கமாக விளங்கும் ஜேர்மனியச் சிந்தனைக்குள்ளிருந்து புரிந்துகொண்டதன்வழி நம்மைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டதைத் தொடர்ந்து முன் தள்ளுவதில் இக்கட்டுரைத் தொடர் சாதகமாகச் சில புரிதலை வழங்க முடியமெனக் கருதுகிறேன்.
தொடரும்…
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.12.11