Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்…:டி.அருள் எழிலன்

உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மரபணு மாற்ற சோதனைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கிய சூழலில் இந்தியாவிலேயே மரபணு மாற்றச் சோதனையில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். கத்தரி நெல்லில் மரபணு மாற்றத்தை நடத்தியவர்கள் இப்போது கைவைத்திருப்பது நமது பாரம்பரீய மருந்துகளான சித்தா ஆயுர்வேதத்தில். சோதனைகள் முடிந்து விரைவில் நமது பாரம்பரீய வேம்பும், மஞ்சளும், இஞ்சியும் அமெரிக்க தனியார் முதலாளிகளின் கைகளுக்கு செல்லப் போகிறது. வேகமாக இவைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல்வாதிகள், சிலர் மௌனமாக வேடிக்கை பார்த்து தாரைவார்ப்பை ஆதரிக்கிறார்கள்.

‘‘ மரபணு பொறியியல் அல்லது மரபணு மாற்றம் என்பது தாவரங்களில் பூச்சிக் கொல்லி சக்தியை அதிகரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்த நமது மரபான பயிர்களின் அணுக்களை மாற்றி உற்பத்தி செய்வதுதான் மரபணு மாற்றம் செய்வது.ஒரு விளை பொருளை எடுத்து அதில் செயர்க்கை கரு ஊட்டல் மூலம் பத்து விதமான புதிய ரக அதே விளை பொருளை உருவாக்குவதுதாம் மரபணு மாற்றம்.இந்த மரபணு மாற்றத்தின் அபாயங்களை அறிந்த அய்ரோப்பிய நாடுகள் இந்த ஆய்வுகளை தங்கள் நாட்டில் செய்ய தடைவித்திருக்கிறது.அது மட்டுமல்ல அமெரிக்காவில் கூட இந்த ஆய்வுகள் ஆய்வுக் கூடங்களில் வைத்து நடத்தப்படுகிறதே தவிற அவர்களின் விளை நிலங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில்லை.அவர்களின் மண்ணின் வளம் கெட்டு விடும் என்பதால் அமெரிக்க முதலாளிகள் பல்லுயிர் பெருக்கத்தின் இதய பூமிகளுள் ஒன்றான இந்தியாவை தேர்ந்தெடுத்து நமது மண்ணையும் மக்களையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமெரிக்க முதலாளிகளுக்கு பல்லக்குத் தூக்கும் இந்திய அரசியல்வாதிகளோ பணத்துக்காக நாட்டையும் இந்த மக்களையும் அமெரிக்க முதலாளிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார்.சித்த வைத்தியர் டாக்டர் சிவராமன்.
‘‘ கத்தரி,வெண்டை,தக்காளி,நெல்,கம்பு,இராகி,சோளம்,உளுந்து,தட்டைப்பயறு,கொண்டைக்கடலை,உருளைக்கிழங்கு,குட்டிக்கிழங்கு,வாழை,பப்பாளி,ஏலம்,கரும்பு, என பல வகையான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.(நிமீஸீமீtவீநீ விஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ ஷீக்ஷீ நிமீஸீமீtவீநீ விணீஸீவீஜீuறீணீtவீஷீஸீ) இவைகளில் நெல்ரகங்கள்,காய்கரி ரகங்கள் என வயல்களில் சோதனை நிலையில் உள்ளன. தமிழ்நாடு வேளாண்பலகலைக் கழகமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகமும், சென்னையில் லயோலாக் கல்லூரியும் இத்தைகைய மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபட்டுள்ளது.மகிகோ மான்சான்டோ என்னும் அமெரிக்க நிறுவனத்திறகாக நடத்தப்படும் இந்த ஆய்வுகளுக்காக இந்திய விவசாயிகளும் விளை நிலங்களும் பலிகடாவாக்கப்படுகிறது.அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்லி மரபணு மாற்றப் பயிர்களை பயிர் செய்யச் சொல்கிறார்கள் பயிர் செய்யும் விளை பொருட்களில் இருந்து கண்டு பிடிக்கப்படும் புதிய ரக விளை பொருட்களுக்கான உரிமை அமெரிக்க மான்டான்டோவுக்கு போய் விடும். அப்படி நமது விளை பொருளுக்கான உரிமை அமெரிக்க முதலாளிகள் கையில் சென்ற பிறகு இந்திய விவாசாயிகள் விரும்பினால் கூட அதை விளைவிக்க முடியாது.காப்புரிமைச் சட்டத்தின் கீழ நெல் விவசாயம் செய்யும் விவசாயி கைது செய்யப்படுவார்.அது மட்டுமல்ல ஏன் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஆய்வை தடை செய்திருக்கின்றன? இந்த மரபணு மாற்றப்பயிர்களால் விளை நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ன? அதை உண்ணுகிற மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் என்ன? என்பது போன்ற எளிய சந்தேகங்களுக்கு இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைகழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் பதில் சொல்ல வேண்டும்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் தமிழக பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.

இந்தியாவின் முதல் மரபணு மாற்ற பொருளான கத்தரிக்காயை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த மரபணு மாற்றப்பயிர்களை அங்கீகரிப்பதற்கும் சந்தைப் படுத்துவதற்குமான ‘தேசீய உயிர்த் தொழில் நுட்ப அங்கீகரிப்பு அமைப்புச் சட்டம்’ ஒன்றை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது இதில் விளைபொருட்கள், பாரம்பரீய மருந்துகள்,உணவுப் பொருட்களோடு தொடர்புடைய இந்த சோதனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய ஏழு அமைச்சகங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை வெறும் அறிவுரைகள் வழங்கும் கருத்துக் கருவூலங்களாகவே மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் பொறுப்பின் கீழ் வரும் பாரம்பரீய மருந்துகளான சித்தா,ஆயுர்வேத பரம்பரை மூலிகைகளை குறிவைத்திருக்கிறது மரபணு மாற்றச் சோதனைகள்.

‘‘உலகில் பல்லுயிர் விளை நிலம் என்ற வலையம் ஒன்று உண்டு. அதாவது மண்ணின் தன்மைக் கேற்ப வளருகிற தாவரங்கள்.இம்மாதிரி பல்லுயிர் வளம் உலகம் முழுக்க 14 இடங்களில்தான் உள்ளது அதில் பிரதான ஒன்பது இடங்கள் இந்தியாவில் உள்ளது. உலகெங்கிலும் ஆங்கில மருந்துகளின் பின் விளைவுகளினால் அதிலிருந்து மீள நினைக்கும் மக்கள் ஸிணீtவீஷீஸீணீறீ மிக்ஷ்மீபீ றிலீஹ்பீஷீ னீமீபீவீநீவீஸீமீ &க்கு மாற நினைக்கிறார்கள். இதனால் உலகெங்கிலும் இந்திய மூலிகை மருந்துகளுக்கும் பல்லுயிர் சூழலில் வளரும் மருத்துவ குணமுள்ள மருந்துகளுக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றம் மூலம் மாற்றி இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிமான மக்களை அதை நுகரும் சந்தைப் மனிதர்களாக மாற்ற முயர்ச்சிக்கிறது அமெரிக்க நிறுவனங்கள். அதற்கு துணை போகிறது மத்திய அரசு.சித்த வைத்தியத்தில் நில வேம்பு இருக்கிறது காலம் காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நில வேம்பு சிக்கன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து என்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் நில வேம்பில் உள்ள எந்த கெமிக்கல் சிக்கன் குன்யாவை கட்டுப்படுத்துகிறது என்றால் அதை பாரம்பரீய மருத்துவத்தில் தீர்மானமாக சொல்லிவிட முடியாது ஆனால் மரபணு மாற்றத்தில் நிலவேம்பில் உள்ள ஏதோ ஒரு கெமிக்கலை எடுத்துக் கொண்டு அது ஒரு நோய்க்கு மருந்தாகிறது என்பதை கண்டு பிடித்து உடனே நிலவேம்பில் அந்த கெமிக்கலைச் செலுத்தி அதை அதிக அளவில் உற்பத்தி செய்து. அதை சந்தைப் படுத்துவார்கள்.இதன் மூலம் ஒரு பக்கம் நில வேம்பின் காப்புரிமை கண்டு பிடித்த கம்பெனியின் கைகளில் போவதோடு. நில வேம்பின் வளர்ச்சியே பாதிக்கப்படும்.இதை எப்படி புரிந்து கொள்வதென்றால் பால் கலக்காத கடும் டீ யை நாம் அருந்தும் போது அது வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது, ஆனால் தேயிலையில் இருக்கும் எல்லா கெமிக்கலையும் எடுத்து தனித்தனியாக பிரித்து சோதித்தால் அதில் எந்த கெமிக்கலுக்கும் அப்படி வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடிய மலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இல்லை என்பது ஆய்வில் தெரிகிறது. இதுதான் நமது பாரம்பரீய மருந்துகள். அதன் மருத்துவ குணம் என்பது இந்த மண்ணின் உயிர்ச்சூழலோடும் வளத்தோடும் தொடர்புடையது.இந்த மூலைகைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுவதுதான் அதன் இயர்க்கைத் தத்துவம். ஆனால் இவர்கள் இதை வெறும் பணம் வசூலிக்கும் மருந்தாக மாற்றுவதோடு சாதாரண மக்களின் வீடுகளில் வளர்க்கும் இந்த தாவரங்களை காப்புரிமை என்ற பெயரில் ஏக போக உரிமையாளர்களாகப் பார்க்கிறார்கள்.மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இம்மாதிரி ஆய்வுகளை பாரம்பரீய மூலிகை தாவரங்களில் நடத்தப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என்கிற டாக்டர் சிவராமன்.
‘‘இந்தியாவில் உள்ள தாவரங்களில் சுமார் 1500 தாவரங்கள் மருத்துவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.அதில் 500 தாவரங்கள் நேரடியாக மருந்து தயாரிப்பில் ஈடு படுத்தப்படுகிறது. இது மருந்தின் வீரியம், மூலப்பொருட்களின் பயன்பாடு நோயாளிகளின் தேவை என இவைகளை கணக்கிட்டே உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் மரபணு மாற்றத்தை அனுமதித்தால் இந்த மூலிகைச் செடிகளின் தன்மை அதாவது மருத்துவ குணம் மாறுவதோடு இனி இந்த தாவரங்களுக்கு நாம் உரிமை கொண்டாட முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான்.அதனால் உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த மரபணு மாற்ற சோதனையை அடியோடு கைவிட வேண்டும் அதுதான் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது’’ என்கிறார் டாக்டர் சிவராமன்.-

‘‘உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருள் சந்தைக்கு வரும் போது அந்தப் பொருள் பற்றிய விபரங்களை குறிப்புகளாக அச்சிட்டு அதை அந்தப் பொருளின் உறை மீது லேபிளாக ஒட்டுவது வழக்கம். ஆனால் மரபணு மாற்ற பொருட்கள் சந்தைக்கும் வரும் போது அது இயர்க்கையாய் நமது விவசாயிகள் உற்பத்தி செய்ததா? அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? என்கிற விபரம் கூட அதில் இருக்காதாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்ப்ட்ட கத்தரிக்காயை வாங்கி உண்டு நமக்கு ஏதாவது விசித்திரமான நோர்கள் உருவானால் அது எதனால் உருவானது என்று கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியாத சூழலுக்கு மக்களை தள்ளி விட்டது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் சந்தைக்கு வரும் எந்தப் பொருளும் இது மரபணு மாற்றம் மூலம் தயாரிகக்ப்பட்டது என்கிற விபரம் இருக்கும். நுகர்வோருக்கு வாங்கும் பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தியாவில் நுகர்வோருக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கூட் மறுக்கப்பட்டு அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதை வாங்க வேண்டும் என்ற மறைமுகமான நிர்பந்தத்துக்கு இது வழி வகுக்கிறது.அது மட்டுமல்லாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிற ‘‘ஆயுஷ்’ நிறுவனம்தான் பாரம்பரீய மூலிகைகள் மருந்துகளை வளர்தெடுக்கிறது.ஒரு பக்கம் இப்படி வளர்த்தெடுப்பது போல் வளர்த்து விட்டு அதே பாரம்பரீய மூலிகைகளை மரபணு மாற்றச் சோதனைகளுக்கு உட்படுத்துவதை வேடிக்கை பார்க்கிற அன்புமணி ராமதாஸ் இந்த ஆய்வுகளை தடை செய்ய முன் வரவேண்டும்.இந்திய மக்களுக்கு செய்கிற உண்மையான மக்கள் சேவை என்பது இதுதான்’’ என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரப் பொறுப்பாளர் ஜெய்கிருஷ்ணா.

Exit mobile version