Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அச்சுறுத்தும் கொரோனா-சென்னை திணரும் மருத்துவமனைகள்!

இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை மூன்றாவது அலை என்கிறார்கள். இரண்டு அலைகளையும் விட மூன்றாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. டெல்டா வைரஸை விட ஓமைக்ரான் பரவும் தன்மை வேகமாக உள்ளதாதால் அதிக அளவு மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் இப்போது வரை மிதமானதாகவே உள்ளது ஆனால் இந்த வைரஸ் இன்னும் திரிபு அடைந்தால் அதன் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 8,963- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பரவிய கடந்த 2019- ஆம் ஆண்டில் இருந்து  தற்போதுதான் சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.  சென்னையில் தற்போதைய நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,977- ஆக உள்ளது.  கொரோனா 2-வது அலையின் போது சென்னையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.

அதாவது கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி 49 ஆயிரத்து 236- பேர் சிகிச்சையில் இருந்தனர். இதுதான் சென்னையில் அதிகபட்சமாக இருந்த நிலையில், 3-வது அலையில் 50 ஆயிரத்தை கடந்து அதிரவைத்துள்ளது.  எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 வது அலையை போல தீவிர பாதிப்புகள் இல்லாமல் பெரும்பாலும் மிதமான பாதிப்புகளே உள்ளதாக சுகாதரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனால் மருத்துவமனைகள் மீண்டும் நிரம்பி வழியத்துவங்கியுள்ளது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Exit mobile version