Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதி உரிமை பெற்றவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டமை சட்டவிரோதமானது :சுவராம்

SRI LANKA-UN-UNREST-BANவிடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில், ஐ.நா. அகதிகள் அந்தஸ்து பெற்றிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டபோது, மலேசிய பொலிஸார் அவர்களை சட்டரீதியாக கையாளவில்லை என மலேசியாவின் சுவராம் என்ற மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.

மலேசியாவிற்கு அதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களை கைதுசெய்து, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட செயல் கண்டித்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

”மலேசிய பொலிஸார் இந்த மூவரையும் கடந்த மே 15ஆம் திகதி கைதுசெய்தனர். அவர்களை 14 நாட்கள் வரையில் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தது. நேற்று முன்தினம் (26) அவர்கள் நாடு கடத்தப்பட்டது சட்டப்படி தவறாகும். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவே பொலிஸார் எம்மிடம் தெரிவித்தனர். எனினும், குடும்பத்தார், ஐ.நா. அகதிகள் அலுவலகம், அவர்களின் விவகாரங்களைக் கையாண்ட மனித உரிமை அமைப்பு ஆகியவற்றுக்கு அறியத்தராமல் இவர்கள் அவசரமாக, இரகசியமாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் எமக்கு பெய்கூறிவிட்டனர். இந்த மூவரும் நடத்தப்பட்ட முறை குடிநுழைவு சட்டத்திற்கு முற்றலும் முரணானதாகும். குடிநுழைவுச் சட்டம் முற்றிலும் உதாசினப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியா அனைத்துலக சட்டத்தை மீறிவிட்டது. இந்த மூவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் மலேசியா பொலிஸார் ஏன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை. இவர்களில் இருவர் ஐ.நா.வின் அகதி அந்தஸ்து பெற்றவர்கள். எனினும், மலேசிய பொலிஸார் இவர்களை தீவிரவாதிகள் என்று கூறியிருந்தது. இதனை அவர்கள் நிரூபித்திருக்க வேண்டும். நீதிமன்றில் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது வெறுமனே நாடு கடத்தியதன் அடிப்படை மற்றும் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது” என ஆர்.தேவராஜன் தெரிவித்தார்.

மலேசியாவில் ஐக்கிய நாடுகளின் அகதி உரிமை பெற்றவர்கள் நாடுகடத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பானதாகும். அவர்களைப் பாதுகாப்பான நாட்டில் ஒப்படைப்பது இன் கடமையாகும். புலம்பெயர் மக்கள் அவர்களின் பாதுகாப்பு உடப்ட உலகம் முழுவது உள்ள அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கையை முன்வைத்து ஐ கேள்வியெழுப்பத் தயாராகவேண்டும்.

Exit mobile version