
சட்டப்பேரவை தேர்தலில் 160 தொகுதிகளில் அஇஅதிமுக தனித்துப் போட்டியிட்டது. இதில் 140 மேற்பட்ட தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலையில் உள்ளார்.
விஜயகாந்தின் தே.மு.தி.க. 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், ஸ்ரீதர்வாண்டையார் மூவேந்தர் முன்னணி கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி படுதோல்விகளை சந்தித்துள்ளது.
தி.மு.க. 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பாமக ஒரு தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த தேர்தலை பொறுத்த வரை அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் அஇஅதிமுக 140க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனின்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
3வது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த தேர்தலில் திமுகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவே மக்கள் அஇஅதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.
இருந்தாலும் 2006ஆம் ஆண்டு திமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போது அஇஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.