இந்த நிலையில் வித்தியாவின் கொலையாளிகளுக்கு எதிராக சட்டத்தரணி என்.சிறீகாந்தா வாதிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.
முன்னதாக வீ.ரி.தமிழ்மாறன் கொலையாளிகளைக் காப்பாற்ற முற்பட்ட போரது சீறீகாந்த்த அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தமையை ஊடகங்கள் சுட்டிக்காட்டின. சிறீகாந்தா தடையங்களை அழிப்பதற்கே வழக்கைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள முயல்கிறார் என்ற சந்த்தேகங்கள் தெரிவிக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கணேசலிங்கம் தனது வீட்டுப் பணிப்பெண்ணான, 13 வயதுக் குழந்தை யோகேஸ்வரியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இதற்கான வழக்கு நடைபெற்றது. குற்றவாளி கணேசலிங்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டவர் சட்டத்தரணி சீறீகாந்தா.
கணேசலிங்கம் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. ஆயினும் யோகேஸ்வரி கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக இன்றுவரை கருத்துத் தெரிவிக்காத சிறீகாந்தா இப்போது வித்தியாவின் கொலையிலும் தலையிடுவது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
தொடர்புடைய பதிவுகள்:
இதனோடு கூடவே பாலியல் வக்கிரங்களைச் செய்திகளாக்கி வெளியிடுவதில் புலம் பெயர் நாடுகளிலிருந்து நடத்தப்படும் ஊடகங்கள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. லண்டனில் பல செக்ஸ் இணையங்களின் உரிமையாளர் ஒருவர்….