உலகத்தின் ஒரு முனையில் பெண்களின் முழு உடலையும் மூடி மறைப்பது சமூகத்தில் நாகரீகமாகக் கருதப்படும் அதே வேளை மறு முனையில் பெண்களின் உறுப்புக்களை அதிக அளவாக வெளிக்காட்டுவது நாகரீகமாகக் கருதப்பட்டது.
பெண்கள் அடிமையாக இருந்த நிலை மாறி விற்பனைப் பண்டமாக பரிணாமம் பெற்ற மேற்கு நாடுகளில் இன்று புதிய பெண் உருவாக்கப்பட்டுள்ளாள்.
உயிருள்ளபெண்களின் பயன்பாட்டு மதிப்பைத் தரமிறக்கி உணர்வற்ற முழுமையான விற்பனைப்பண்டமாக பெண் உருவாக்கப்பட்டுள்ளாள்.
TrueCompanion என்ற அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தப் பெண் இயங்குவதற்கு மின்சக்தி தேவை. ஒரு பெண்ணைப் போன்றே உயிருள்ள தோற்றம் கொண்ட இந்த மனித இயந்திரத்தின் தொழில் பாலுறவு. பாலுறவு கொள்வதற்கு என்று மட்டுமே தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்ணின் பெயர் Roxxxy . உருள்ள பெண்ணைப் போன்ற இயல்புகளை முன்வைத்து உருவாக்கப்படுள்ள இப் பெண்ணே செக்ஸ் இற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ள முதல் இயந்திரம்.
இதனை உருவாக்கியவர்கள் இது பாலுறவிற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்றும் வாழ்க்கைத் தோழி போன்றும் செயற்படும் என்கிறார்கள்.
ஏகாதிபத்திய நாடுகளில் மக்கள் உரிமைக்காகக் குரல்கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித குலத்தின் அரைவாசிப் பகுதியான பெண்களை விலை நிர்ணையம் செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்களின் வக்கிர உணர்வுகளுக்கு அடிபணிந்து நடந்துகொள்வதே பெண் என்பதற்கான குறியீடு என்று முதலாளித்துவ உலகில் வாழும் பெண்களுக்கு சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் சொல்லிக்கொடுத்தது. ஆண்களின் நுகர்வுக்காக மட்டுமே பெண்கள் இதுவரை தயார்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதற்கு புதிய ரொபோட் இயந்திரம் ஒரு குறியீடு. இந்த இயந்திரத்தின் வரவு பெண்களை ஒடுக்கி அடிமையாக்கும் சமூகத்திற்கு மற்றொரு ஆயுதம். மனிதகுலத்தின் இந்த அவமானம் உலகத்தின் ஜனநாயகக் காவலர்கள் என ஊழையிடும் அமெரிக்க பல்தேசிய வர்த்தகர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
http://www.newstatesman.com/politics/feminism/2015/09/should-we-ban-sex-robots