சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் -03 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

1. தொழிலாளர் நலன் சாரந்த சட்டங்கள்

1.1 தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்

sl_workersதொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தும் இச்சட்டம் தொழிற்சாலைகளில் காணப்படும் ஆபத்தான இயந்திரங்கள், உபகரணங்கள் பாதுகாப்பாக வைத்திருத்தல், பக்குவப்படுத்தல், வேலை நேரங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் காயங்கள் விபத்துக்ள, நோய்கள் மரணத்திலிருந்து பாதுகாத்தல் வேலையாட்களுக்கான உணவு, ஓய்வு உடை மாற்றும் அறை, உடை வைக்கும் ஊரிடிழயசன முதலுதவி உபகணரங்கள் பாதுகாப்பு கவசங்கள், கண்ணாடி, தலை கவசம், பாதணி அவரசமான ஆபத்திலிருந்து தப்பிப்பதற்கான கதவுகள் தீ பற்றும் போது தீயணைப்பு கருவி, ஆண் பெண் தனித்தனியான மலசலகூடங்கள், சுத்தமான குடிநீர் என்பன தொழிற்சாலையினுள் காணப்பட வேண்டும் என ஏற்பாடு செய்கின்றது. இச்சட்டத்தின் சிறப்பு யாதெனில் வேறு ஏதாவது சட்டத்துடன் இச்சட்ட ஏற்பாடுகள் முரண்பட்டாலும் இச்சட்டமே மேலோங்கும் என்பதுடன் இதுவே பிரயோகிக்கப்படவும் வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் அதன் கட்டுமானப்பணிகள், திருத்தம், மாற்றம் பிரதான தொழிற்சாலை மேற்பார்வை பொறியியலாளரினால் அல்லது மாவட்ட தொழிற்சாலை மேற்பார்வை பொறியியலாளரினால் அனுமதியளிக்கப்பபட்டலான்றி மேற்கொள்ளப்படலாகாது.

தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதியப்பெறாத தொழிற்சாலைகளில் வர்த்தகம், வியாபாரம் செய்வதற்கான அதிகாரத்தினை உள்ளுராட்சிமன்றங்கள் வழங்கயியலாது.

ஒவ்வொரு தொழிற்சாலையும் கழிவு நீரினால், மனிதக் கழிவினால் நோய்கள் ஏற்படாமலும், நாற்றமில்லாமலும், இரைச்சல் இல்லாமலும் சுத்தமாக காணப்படுதல் வேண்டும.;

நடைப்பாதை, மாடி வேலையறை, நிலம் என்பவற்றிலிருந்து தூசுத்துகள், கழிவுகள் அகற்றுவதற்கான பொருத்தமான நடவடிக்கையெடுக்கப்படுதல் வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் நிலம் சுத்தம் செய்யப்பட்டு கழுவுதல் வேண்டும்

சுவர், மறிக்கப்பட்ட இடங்கள், கூரை என்பவை சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும்.

எந்தவொரு தொழிற்சாலையிலும் வேலையாட்களுக்கு ஆபத்து, காயம் விளைவிக்கக்கூடியவிதத்தில் அதிகமான வேலையாட்கள் இருத்தலாகாது.
தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் காற்றுடன் சேராமலும், சுத்தமான காற்றினை தொழிலாளர்கள் சுவாசிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

போதுமானளவிலான வெளிச்சம், இரு பாலாருக்குமான தனித்தனி ஓய்வறைகள், கழிவறைகள் காணப்படுதல் வேண்டும்

தொழில் ஆணையாளர் தொழிற்சாலைகள் இளைஞர் யுவதி பெண்கள் அல்லது யாருக்காவது தீங்கு விளைவிக்கும் விதத்தில் காணப்படுகின்றதா? இல்லையா? என்பது பற்றி மேற்பார்வை செய்ய பணிக்கலாம்.

இயந்திரங்களிலிருந்து தீங்கு ஏற்படாதவாறு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படல் வேண்டும்

இயங்கிக்கொண்டிருக்கும் இயந்திரத்தினுள் பெண்கள் இளையோர் ஈடுபடுத்தப்படலாகாது. போதுமான பயிற்சியும், பூரணமான அறிவும், திறமையும் உடைய இயந்திர இயக்குனரின் மேற்பார்வையின்றி ஆபத்தான இயந்திரங்கள் இயக்கப்படலாகாது.

நச்சு வாயுக்கள், இரசாயன திராவகத்திலிருந்தான பாதுகாப்பு ஏற்பாடுகள், வெடிப்புகள் ஏற்படாதவண்ணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் பொருத்தமான, அனைவரும் அணுகக்கூடிய இடத்தில் அமைந்த குடிநீர் வசதி, குடிநீர் தாங்கிகள், கோப்பைகள், கழிவகற்றல் வசதிகள், உடை மாற்றும் வசதிகள் உலர்த்துவதற்கான வசதிகள், கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழில்களில் போது அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் அதிர்வுகள், கதிரிகளிமிருந்தான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் என்பனவும் தொழிற்சாலை உரிமையாளரின் கடப்பாடாகும்.

நிலக்கீழ் அறைகளில் இயந்திர வேலைகளை செய்யாமலிருத்தல், தவிர்த்தல், போன்ற சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவென உகந்த நடவடிக்கையெடுக்குமாறு பணிக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளரிடமும், மாவட்டஃ பிரதான தொழிற்சாலை மேற்பார்வை பொறியியலாளரிடமும் காணப்படுகின்றது. இதற்கு மேலாக அமைச்சர் விதிமுறைகளை, ஒழுங்கு முறைகளை உருவாக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.

இவர்கள் தொழிற்சாலை உரிமையாளர், உடைமையாளர,; முகாமையாளர், தோட்டதுறைக்கு எழுத்து மூலமான அறிவித்தலின் படி பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு காலத்துக்கு காலம் பணிக்கும் அதிகாரம் கொண்டுள்ளனர்.

தோட்ட முகாமையாளர் தொழிற்சாலையில் வேலை செய்யும் போது வேலையாளுக்கு (விபத்தினால்) மரணம், 03 நாட்கள் வேலைக்கு செல்ல முடியாதவாறான காயம், இயலாமை, வெப்பம், நச்சு சுவாசித்தமை மின்தாக்கம் போன்ற காரணங்களினால் நினைவிழந்தமை தொடர்பில் எழுத்து மூலமாக மாவட்ட தொழிற்சாலை மேற்பார்வை பொறியியலாளருக்கு (னுளைவசiஉவ குயஉவழசல ஐnளிநஉவiபெ நுபெiநெநச) அறிவித்தல் வேண்டும்.

ஏதேனும் நச்சுப்பொருள், ஆசனிக்கமிலம், பொசுப்பரசு, மேக்கரிக்கமிலம் போன்றவற்றால் பாதிக்கப்ட்டவர்கள் தொடர்பில் சிகிட்சையளிக்கும், மேற்பார்வை செய்யும் ஓர் மருந்துவர் அவ்விடயம் தொடர்பில் ஊhநைக குயஉவழசல ஐnளிநஉவழசல நுபெiநெநச ற்கு நோயாளி அல்லது இறந்தவர் விபரங்களை வழங்க வேண்டும் இல்லாத பட்சத்தில் அது ஒரு குற்றமாக கருதப்படும்.

தொழிற்சாலைகளில் விபத்துக்களில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் பொலிஸ், மரண விசாரணை அதிகாரி னுளைவசiஉவ குயஉவழசல நுபெiநெநச ற்கு அறிவித்தல் வேண்டும் பின்பு மரண விசாரணை அங்கு நடாத்தப்படும் போது பங்குபற்றவும் செய்யலாம், இதன் போது வேலையாட்கள், தொழிற்சங்கமும் சம்பவம் பற்றி சாட்சி கூறலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களின் நீதிவான் அதிகமான அதிகாரங்களாக் கொண்டுள்ளார்
தொழிற்சாலைகளில் வேலையாட்கள் தங்களது உடல் நலத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சுமை சுமக்கச்செய்யவோ அதிகமாக இரைச்சல் விடும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு கவசங்களின்றி வேலைக்கமர்த்துவதோ இச்சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி தொழிற்சாலைகளில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் அது தொடர்பில் விதிகளையும் ஒழுங்குகளையும் ஆக்கும் அதிகாரம் அமைச்சரிடம் காணப்படுகின்றது.

தொழிற்சாலைகளில் ஏற்படும் மரணங்கள், விபத்துக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியரை பணிக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்குண்டு. இதன்போது வைத்தியர் ஓர் விசாரணையதிகாரியைப்போல அதிகாரம் கொண்டு செயற்படுவார்

இளம் ஆட்கள், பெண்கள் ஒரு நாளைக்கு உணவு, ஓய்வு நேரம் தவிர்த்து ஒரு நாளைக்கு ஒன்பது மணித்தியாலங்களுக்கு அதிகமாகவோ, வாரத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு அதிகமாக வேலைக்கமர்த்தப்படலாகாது என தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டம் கூறுகின்றது.

16 வயதிற்குற்பட்ட இளம் ஆட்கள் 12 மணித்தியாலங்களுக்கு மேல் வேலைக்கமர்த்தப்படலாகாது அத்தோடு காலை 6.00 மணிக்கு முன்பும் மாலை 6.00 மணிக்கு பின்பும் வேலைக்கமர்த்தப்படலாகாது. மேலும் 18 வயதிற்கு குறைந்தோர் இரவு 8.00 மணிக்குமேல் தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்படலாகாது.
பெண்கள், இளம் ஆட்கள் தொடர்ந்து 4. 1 ஃ2 மணித்தியாலங்களாக அடைவேலையின்றி வேலையிலீடுபடுத்தப்படலாகாது, அவர்களுக்கு காலை 11.00 மணி, பகல் 1.00 மணி என போதுமானளவு இடைவேளை வழங்கப்படவேண்டும்

பெண்கள் தமது விருப்பத்திற்கு மாறாக அரவு வேலைகளில் ஈடுபடுத்தப்படலாகாது. தொழில் ஆணையாளரின் அனுமதியுடன் இரவு 10.00 மணிக்கு பின்பும் வேலைக்கமர்த்தலாம்.

காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை வேலைசெய்யும் பெண் இரவு 10.00 மணிக்கு மேல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட முடியாது.

இரவு வேலை செய்வோருக்கு 1.1ஃ2 நாள் சம்பளம் வழங்கப்படவேண்டும், பெண்கள் சுகாதார விடயங்களை கவனிக்க பெண் மேற்பார்வையாளர்கள் இரவு நேரங்களில் ஈடுபடுத்தப்படவேண்டும்

எந்தவொரு பெண்ணும் ஒரு மாதத்திற்கு 10 நாட்களுக்கு அதிகமாக இரவு வேலைகளில் ஈடுபடுத்தப்படலாகாது.
மேலதிக வேலை நேரம் தொடர்பில் எந்தவொரு பெண்ணும் ஒரு மாதத்தில் 60 மணித்தியாலங்களுக்கு மேல் வேலைக்கமர்த்தப்படலாகாது என தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் கூறுகின்றது.
கர்ப்பிணித்தாய்மார், தாய்மாரை இரவு வேலையி; அமர்த்துமுன் எழுத்து மூலமான சம்மதத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலதிக வேலைநேரம் தொடர்பில் பெண்கள், இளம் ஆட்களின் சுகாதாரம், உடலாரோக்கியம் பற்றி கவனத்தில் கொண்டு அமைச்சர் விதிமுறைகளையாக்கும்

அதிகாரத்தினைக்கொண்டுள்ளார.; அமைச்சர், தொழில் ஆணையாளர் பெண்கள், இளமாட்கள் ஆரோக்கியம் பற்றி ஆராயவென வைத்தியரை நியமிக்கலாம்.

தொழிற்சாலை பொறியியலாளர் ஏதேனும் இளம் ஆள் வேலைக்கமர்த்தக்கூடிய உடலாரோக்கியத்துடன் இல்லை என அறிவித்தல் வழங்கப்படும் பட்சத்தில் அந்நபரை வேலைக்கமர்த்தலாகாது.

தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டம் துறைமுகங்கள், கப்பல் கட்டல் கைத்தொழிலின்போதான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கூறுகின்றது.

தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின்கீழ் தாபிக்கப்படும் ஐந்து பேரைக்கொண்ட கைத்தொழில் பாதுகாப்பு சுகாதார ஆலோசனைக்குழு ஆணையாளர், அமைச்சருக்கு ஆலோசணை வழங்கவென தாபிக்கப்படுவதுடன் இதில் தொழிற்சாலை உரிமையாளர் சார்பாக ஒருவரும், தொழிலாளர்கள் சார்பாக ஒருவரும், துறையில் நிபுணத்துவம் கொண்ட ஒருவரும் உள்ளடங்குவர் இவர்களை அமைச்சர் நியமனம் செய்வார்.

தொழிற்சாலை கட்டளை சட்ட விதிமுறைகளுக்கு இணங்கியொழுகாத உரிமையாளர்கள், முகாமையாளரை தண்டிக்க ஏதுவான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்படுகின்றது.

ஏதேனும் ஆளின் மரணம், காயங்கள் விபத்து ஏற்பட தொழிற்சாலையின் உரிய நடாத்துகை குறைபாடு காரணமாகும் பட்சத்தில் ரூபா 100000/= வரை தண்டம் விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குண்டு இது நட்ட ஈட்டுத்தொகைக்கு மேலதிகமாக அறவிடப்படும்.
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் பெற்றோருக்கெதிராக வழக்கிட்டு தண்டனை வழங்கவும், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், ஆவணங்களை (தரவுகளை) மாற்றுடல் மூலம் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் ரூபா 50,000/= தண்டப்பணம் ஆறு மாதத்தினை தாண்டாத சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமென சட்டம் கூறுகின்றது.

இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் கூட இவை எந்தளவில் இலங்கை தொழிற்துறையில் பிரயோகிக்கப்படுகின்றது?, எந்தளவில் ஆணையாளரும் அமைச்சரும் இச்சட்டத்தினை பிரயோகிக்கின்றனர்?, மேற்பார்வைசெய்கின்றனர்? என்பது கேள்விக்குறியே !

சுதந்திர வர்த்தக வலயத்தில் காணப்படும் கைத்தொழில் பேட்டைகள் தொழிலாளர்களின் இரத்தத்தினையும் தசையினையும் உறிஞ்சும் ஒக்டோபஸுகளாகவுள்ளன. மூளை சலவை செய்யப்பட்ட இவர்கள் பணத்திற்கு மட்டுமே அடிமையானவர்கள். வேலைச்சுரண்டல், உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்மை, ஓய்வின்மை, மனவுளைச்சல், தொழிலுரிமைமீறல், பாலியல் தொல்லைகள், சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஏழை இளம் சமூதாயம் சுதந்திரமின்றி, சுரண்டப்படுகின்றது, சொல்லெனாத்துன்பத்தினை அனுபவிக்கின்றது.

சம்பளக்கோரிக்கை, தொழிலுரிமை பற்றி பேசினாலே தொழில் பறிபோகும் ஆபத்தான சூழலில் நாட்டின் கிராமப்புற, தோட்டப்புற இளைஞர் யுவதிகள் தமது இளமைக்காலத்தினை தொழிற்பேட்டைகளில் தொலைக்கின்றனர். நோயுற்று, இன்பத்திற்காக பிழையான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, இயந்திரமாகி, சீரழிந்து நெரிசலான கட்டடங்களுக்குள் குறுகிக்கிடக்கின்றனர். கைத்;தொழில்பேட்டைகளி எவ்வளவு பெரிதாக காட்சியளித்தாலும் தொழிலாளர்கள் வசிப்பிடங்கள் சுகாதாரத்திற்கு கேடான சேரியாகத்தான் காட்சியளிக்கின்றது. நீங்கள் இப்பிரதேசங்களுக்கு சென்று பார்க்கும் போது உண்மைநிலையினை அறியலாம் செல்வம் கொழிக்கும் கொழும்பு, கட்டுநாயக்க, கட்டுநேரிய பிரதேசம் இளைஞர் இளமையும், இன்பமும் தொலைத்த இருண்ட பூமி.

தொழிற்சாலைகள் கட்டளைச்சட்ட ஏற்பாடுகள் சிறந்தமுறையில் நடைமுறைப்படுத்தாமையும் காலத்திற்கு ஏற்ப சட்டத்தினை திருத்தங்களுடன் பிரயோகிக்காமையும், அரசாங்கத்தின் அசமந்தப்போக்கும் இந்நிலைமை தோன்றக்காரணமாகின்றன.

தொடரும்..

முன்னைய பதிவுகள்:

சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் – 02 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்
சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் – 1 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்