சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் – 02 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

workersrightsசிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் உறுப்புரை 03 – சிறுவர்களை பாதிக்ககூடிய தீர்மானம் எடுக்கும் தருவாயில் best interests of the child முக்கியமளிக்கப்பட வேண்டும் எனவும், கொள்கை, தீர்மானங்களில் வரவு, செலவு திட்டம், சட்டவாக்கம் என்பற்றில் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது.

உறுப்புரை – 04 அரசாங்கம் சிறுவர் உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும், நிறைவேற்றவும் எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் சமூக சேவை சட்டம், சுகாதாரம், கல்வி விடயங்களில் தமது நாட்டின் சட்டங்களை அதற்கேற்ப நிறைவேற்றவும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதன் போது ஆகக் குறைந்த சமவாய தராதரத்தினையடைய தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் குறிப்பாக சிறுவர் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது.

child-labour_759இன்னும் சாதகமான குடும்ப சூழல், எல்லா வகையான அடக்கு முறை, உரிமை மீறலிலிருந்தான, உடல், உள ரீதியான தாக்குதலிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான கடப்பாட்டினை அரசாங்கம் எடுக்க வேண்டும் என உறுப்புரை 19 கூறுகின்றது. சுகாதார சேவை, சமூக பாதுகாப்பு, போதுமான வாழ்க்கைத் தராதரம், கல்வி, போன்ற உரிமைகள் பற்றி கூறும் சிறுவர் உரிமைகள் சமவாயம் மிக முக்கியமாக இவற்றில் தாக்கம் செலுத்தும் பொருளாதார உரிமைகளையும், சிறுவர் தொழிலாளர் பற்றியும் கூறுகின்றது.

உறுப்புரை – 32 சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, அவர் சுகாதாரம், கல்வி என்பவற்றில் தாக்கம் செலுத்தக்கூடிய தொழில் சுரண்டலிலிருந்து சிறுவர்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் எனவும், சிறுவர்களில் தங்கியிருக்கும் பெற்;றோர், குடும்பம் பற்றியும் சிறுவர்களின் வளர்ச்சியில், கல்வியுரிமை, விளையாட்டு, ஓய்வு உரிமைகளை இல்லாமையாக்கும் நடவடிக்கைகளை தடுக்க அரசாங்கம் உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றது.

(இந்த உரிமைகளையும் அரசாங்கங்கள் எவ்வாறு இவற்றினை தனது நாட்டில் நடைமுறைப் படுத்துகின்றன என்பது பற்றி பின்னர் காண்போம்.)

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான ஓரங்கலுக்க எதிரான சர்வதேச சமவாயம் பெண்களின் தொழில் உரிமைகள் பற்றி அரசு தொழில் பயிற்சி, கல்வித் தகைமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பாடநெறிகள் தொழிநுட்ப, தொழில்சார், உயர் கல்விசார் நிலைகளில் ஈடுபட, கல்விகற்க, பயிற்சி பெற வாய்ப்பேற்படுத்த வேண்டும் எனக் கூறகின்றது.

(உறுப்புரை 10) அத்தோடு உறுப்பினர் 11 – தொழில் தேர்வு சுதந்திரம், பதவி உயர்வு, தொழில் பாதுகாப்பு, சமமான சம்பளப்படிகள் சமனான தொழில் தராதரம், தொழில் செய்யும் போதான சுகாதார உரிமை, திருமணம், தாய்மையின் போதான பாதுகாப்பு, கருத்தரித்தல் என்பதால் தொழிலிலிருந்து நீக்கப்படுதலிருந்தான பாதுகாப்பு, கருப்பகால விடுமுறை கொடுப்பனவு, கருப்பகாலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிலில் ஈடுபடுத்துவதிலிருந்தான பாதுகாப்பு என பல்வேறு உரிமைகளை பாதுகாத்து உறுதிப்படுத்துகிறது இவற்றினை நடைமுறைப்படுத்த அரசு கடப்பாடு கொண்டுள்ளது.

அத்தோடு 1973ம் ஆண்டு 138ம் இலக்க தொழிலில் ஈடுபடுத்துவதற்கான ஆகக்குறைந்த வயது சமவாயம் 1999ம் அண்டு 182ம் இலக்க சிறுவர் தொழில் முறைமைகள் சமவாயம் போன்றவற்றிலும் சிறுவர் தொழில் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசின் கடப்பாட்டினையும் கூறியுள்ளது.

SOLDதொழில் நிமித்தம் சிறுவர்கள், பெண்கள் கடத்தப்படுவது உலகின் மிகவும் பிரபல்யமான வர்த்தமாக, குற்றமாக காணப்படும் போது தொழில் நிமித்தமும், யுத்தம், போதை பொருள் பாவனை, விபச்சாரம், பாலியல் திரைப்படங்கள் ஆக்கம் என்பவற்றுக்காகவும் இவர்கள் கடத்தப்படுகின்றனர். தற்போது உலக நாடுகள் இவை பற்றி கரிசனை காட்டினாலும். சிறுவர்கள் போதைபொருட்களுக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இதை தடுப்பதில் அக்கறையுடைய அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மா(க)யாக்கள் தாக்கம் செலுத்துவதனால் அரசு அவற்றில் வெற்றிபெறுவதில் சிக்கல் நிலை போன்றியுள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என எல்லா நாடுகளாலும் தொழிலாளர் உரிமைகளை மீறி இலாபம் சம்பாதிப்பதில் அந்நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சிறுவர் விபச்சாரம், போதைவஸ்து வியாபாரம், உடல் உறுப்பு வியாபாரம் என சட்ட விரோத வியாபாரங்களால் சிறுவர்கள் அதிகமான ஆசைகாட்டி, பலாத்காரமாக நிர்ப்;பந்திக்கபட்டு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பிரேசில், பங்களாதேஷ், தாய்வான், தாய்லாந்து வொங்கொங் போன்ற நாடுகளில் சிறுவர்கள் பாலியலுக்காக விற்கபடுவதோடு, பெற்றோர், சகோதரர் ஈராக அனைவரும் பாலியலில் ஈடுபடுத்துவது தொடர்பாக அதிர்ச்சியான தரவுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்டவாறு சர்வதேச சட்டங்கள் காணப்படுகின்றபோதிலும் தொழில் முயற்சி, அபிவிருத்தி எனும் சொற்பிரயோகங்களுடன் தொழிலாளர் உரிமைகள் பற்றியோ சிறுவர், பெண்கள் உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு உலக நாடுகள் பின்நிற்க காரணம்; அவை சர்வதேச சட்டங்கள் தொடர்பாகவும், மக்கள் நலன்கள் சட்டங்கள் தொடர்பாக கரிசனை காட்டாமல் நாட்டில் முதலாளித்துவ முதலைகள், செல்வந்த முதலாளிகள் பற்றி கரிசனை செலுத்துவதனாலேயே யாகும் இதுதான் முதலாளித்துவத்தின் தாரக மந்திரம்.

இந்நிலையில் மக்களுக்காக சட்டம் இயற்றுவது போலவும், அதனை நடைமுறைப்படுத்துவது போலவும் அரசுகள் நாடகமாடி உழைக்கும் மக்களை சலுகைக்காக அடிமைப்படுத்தும் நுட்பமொன்றை செய்துவந்துள்ளது. இந்த நுட்பம் எவ்வாறு கொலம்பஸ் தனது நாடுகாண் பயணங்களின்போது போய் இரங்கிய நாடுகளில் உள்ளவர்களை கொன்றுகுவித்து, கற்பழித்து சூரையாடி நாட்டை கைப்பற்றி அடிமைகளை ஸ்பெயின்போன்ற இராச்சியங்களுக்கு பரிசாக வழங்கினானோ அவ்வாறான ஒரு நிலைமை அல்லது உரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்பத்தில் எவ்வாறு அடிமைகளைக் கொண்டு வேலை வாங்கினார்களோ அவ்வாறான ஓர் நிலைமை, எவ்வாறு செவ்விந்தியர்கள் அடிமைகளாக விற்கப்பட்டு பின் கொல்லப்பட்டு, tea1 (1)வெட்டப்பட்டு சின்னாபின்னமமாக்கப்பட்டார்களோ அவ்வாறான ஓர் நிலைமை அல்லது எவ்வாறு தென்னிந்திய தோட்டத் தொழிலார்கள் கொத்துக் கொத்தாக மலேரியா, கொலரா, சின்னமுத்து நோயிற்கும், கடலுக்கும், மிருகங்களுக்கும் அகப்பட்டு மாண்டு போகும் போதும், தாய் தனது குழந்தைக்கு பாலுட்ட பால் சுரக்காது பட்டினியால் தாயும் சேயும் அழும் போது சேய் இருந்தால் தாயும் கிடைக்க மாட்டாள் வேலைக்கு ஆள் போதாது என பெயரிக்கங்காணி சேயை காட்டில் வீசி விட்டு தாயை இழுந்துக் வந்து வேலை வாங்கினானோ அவ்வாறான ஓர் நிலைமை மீண்டும் வந்தால் உலகத்தொழிலாளர்கள் ஒன்று சேருவர் என பயந்து, பிரித்தானியர் சில சட்டங்களை உருவாக்கினர்.

இதை சர்வதேசம் சமாதானத்தக்கான சமிக்ஞையாக சர்வதேச சட்டங்களை ஆக்கியது இதுதான் தொழில் சட்டங்களின் பிறப்பு வரலாறு.

19ம், 20ம் நூற்றாண்டுகளில்; :

இந்திய தோட்டத் தொழிலாளர் கட்டளைச் சட்டம் 1889
தொழிலாளரிடையே பரவும் நோய்கள் கட்டுப்படுத்தல் கட்டளைச்சட்டம் 1912

 தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டம் 1942
 மகப்பேற்று நலன் கட்டளைச்சட்டம் 1939
 பெண்கள், இளைஞர், சிறுவர் வேலைக்கமர்த்தல் சட்டம் 1956
 சுரங்கத் தொழில்களில் பெண்கள் ஈடுபடுத்தல் தடைச்சட்டம் 1937
 தொழற்சங்க கட்டளைச் சட்டம் 1935
 தொழில் பிணக்குச் சட்டம்
 இந்தியத் தோட்டத் தொழிலாளர் கட்டளைச் சட்டம் 1923
 மருத்துவ தேவைகள் கட்டளை சட்டம் 1912
 இந்திய குடிவரவு தொழிலாளர் கட்டளைச்சட்டம் 1923
 ஆகக்குறைந்த சம்பளப்படி சட்டம்1927
 தோட்டங்களுக்குள் தொழில் சங்க பிரதிநிதிகள் பிரவேசித்தல் கட்டளைச்சட்டம் 1970
 Employees council Act 1979
 கடைகள், அலுவலகங்களில் தொழில் புரிவோர் கட்டளைச்சட்டம்
 ஊழியர் சேமலாக நிதிய சட்டம்
 ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டம்
 தொழிலாளர் நட்டஈடு கட்டளை சட்டம்
 பணக்கொடை கொடுப்பனவு
 சம்பளக் கட்டளைச் சட்டம்

என பட்டியலிட்டுக் கொண்டே போகுமளவிற்கு தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்பட்டன வளர்ச்சியடைந்துள்ளன.

இச்சட்டங்களை நாங்கள் அவற்றின் தன்மையினடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம் :

1. தொழில் நலன் தொடர்பான சட்டங்கள்
2. சம்பளக் கொடுப்பனவு தொடர்பான சட்டங்கள்
3. தொழில் தருனர், தொழில் பெறுனருக்கிடையிலான உறவு தொடர்பான சட்டங்கள்
4. நடுத்தீர்ப்பாளர், பிணக்கு இணக்க சபைகள் தொழில் பிணக்கு தீர்த்தல் தொடர்பான சட்டங்கள்
5. இளைஞர், பெண்கள், சிறுவர் தொழில் பற்றிய சட்டங்கள்
6. இந்தியத்தொழிலாளர் தொடர்பான சட்டங்கள்
7. தொழிற்சங்கம் தொடர்பான சட்டம்

இந்த சட்டங்களின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும், நாட்டின் வளர்ச்சியில் போலவே மலையக தொழிலாளர்களுக்கு முக்கியமான பங்குள்ளது. ஆனால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருப்பது தான் வேடிக்கையானது.

தொடரும்………

முன்னைய பதிவு:

சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் – 1 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்