Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்ஸ் தாக்குதல்களை நடத்தியது யார்? : தெரிந்துகொள்ள வேண்டிய 10 புள்ளிகள்

parisattackபிரான்சில் நடைபெற்ற கோரச் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புப் பொறுப்புக் கோரியுள்ளது. இஸ்லாமிய அரசை அமைப்பதாகக் கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் ஆழ அகலகங்களை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் பிரஞ்சு அப்பாவி மக்களின் படுகொலைகளின் பின்னணி ஆராயப்பட வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.ஏஸ்

1. அல் கையிதா என்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிலிருந்து உதித்ததே ஐ.எஸ்.ஐ.எஸ்.

2. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி, சவூதி அரேபியா, கட்டார், இஸ்ரேல் போன்ற நாடுகள் ஐ.எஸ்.ஐ.ஏஸ் மற்றும் அல் கையிதா போன்ற அமைப்புக்களை உருவாக்கி வளர்த்தன.

3. அல் கையிதாவின் இணை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்களையும் வளங்களையும் பிரான்ஸ் உட்பட அமெரிக்காவின் நேச அணிகள் வழங்கி வருகின்றன.

5. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த சிரிய யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கான ஆட்சேர்ப்பிலும் பயிற்சியிலும் நேட்டோ நாடுகளும் துருக்கியும் ஈடுபட்டன.

6. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் பயிற்றுவித்து ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்க நேட்டோ நாடுகளின் உதவியுடன் துருக்கி செய்ற்பட்டதாக இஸ்ரேல் உளவுத்துறை தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

7. பிரான்ஸ், அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் உளவுத் துறையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் செயற்படுகின்றனர்.

8. 2013 ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு ஆயுத உதவிகளை வழங்க ஆரம்பித்ததாகவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அது மிதமானதாகவே இருப்பதாகவும் பிரஞ்சுப் பத்திரிகையான லூ மொந் தெரிவித்திருந்தது.

9. தாக்குதலின் பின்னர் பிரான்ஸ் போலிஸ் அரசு ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளது.

10. அகதிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் குறிப்பாக அப்பாவி இஸ்லாமியர்களுக்கும் எதிரான அரச பயங்கரவாத் தாக்குதல்களைத் துரிதப்படுத்த பிரான்ஸ் அதிகாரவர்க்கம் அனுமதியைப் பெற்றுள்ளது.

Exit mobile version