புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையை எந்தக் குறைந்தபட்ச நிபந்தனையும் இன்றி வரவேற்றுள்ளன. இலங்கை அரசும் இதனை வரவேற்றுள்ளது.
இந்த நிலையில் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இலங்கையில் ஜேர்மன் டெக் எனப்படும் தொழில் நுட்பக் கல்லூரிகளை ஆரம்பித்து நிதிவழங்கி பின்னர் இலங்கை அரசிடமிருந்து இரட்டிப்பகப் பணம் வசூலித்த ஜேர்மனிய அரசின் பணம் வழங்கும் நிறுவனமான ஜீ.ரீ.ஸ்ட், (GTZ)புலம்பெயர் மற்றும் இலங்கை அரச விவகாரங்களில் தலையிட ஆரம்பித்துள்ளது. பேர்கோப் பவுண்டேஷன் எனப்படும் தன்னார்வ நிறுவனம் பல புலம்பெயர் அமைப்புக்களைக் கையாள்கின்றது. இந்த நிறுவனத்தின் நிதி வழங்குனர்களில் ஜீ.ரீ.ஸ்ட் உம் அடங்கும்.
அதே வேளை இலங்கையில் புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து நடைபெறவுள்ளா புலம் பெயர் திருவிழா என்ற நிகழ்வின் அனுசரணையளர்களாகவும் ஜீ,ரீ.ஸ்ட் செயற்படுகிறது.
இவற்றைத் தொடர்ந்து ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைப் பயணம் மக்களுக்கானதல்ல. ஏகாதிபத்தியச் சுரண்டல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.