வங்கியின் கிளிநொச்சி கனகபுரம் கிளையின் ஊழியர்கள் சிலர் முள்ளிவய்க்கால் நினைவு தினத்தின் போது விளக்கேற்றியிருக்கிறார்கள். முகநூலில்
ஒரு பேரினவாதியின் முக நூல் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஹட்டன் நஷனல் எந்தவகயான முன்னறிவிப்புமின்றி இரண்டு ஊழியர்களைப் பதவி நீக்கம் செய்துள்ளது.,
பல்வேறு களியாட்டங்களையும், வெசாக்,நத்தார் தினம், தீபாவளி போன்றவற்றையும் கொண்டாடும் ஹட்டன் நஷனல் வங்கி ஊழியர்கள் நினைவு கூரலை நடத்திய போது அவர்களை மேலதிக விசாரணையுமின்றிப் பதவி நீக்கம் செய்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு பேரினவாதியின் நான்கு வரிப் பதிவிற்காக ஹட்டன் நாஷனல் வங்கி இலங்கையில் வாழும் ஒரு தேசிய இனத்தையே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறது. பேரினவாதத்தின் முகவர்களாகவே அந்த வங்கி செய்ற்படும் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
வங்கியின் கணக்கைத் தமிழர்கள் பலர் மூடி தமது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ஹட்டன் நஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவமானம் என பல எண்ண ஆரம்பித்துள்ளனர்.