Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற அறிக்கை – இலங்கை அரசைப் புனிதப்படுத்தும் அரசியல் நாடகம்

White_washing_war_crimesஐ.நா வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசின் பார்வைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்காக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையில் உலகம் முழுவதும் இன்று நடத்தப்படும் யுத்தங்களின் முடிவில் போர்க்குற்ற விசாரணை நடத்தி கொலைகாரர்களைத் தூய்மைப்படுத்தும் ஏகாதிபத்திய அரசியல் இன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், ஏகாதிபத்தியங்கள் ஈழத் தமிழர்களின் தலைவிதியை முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் முதல் ஐந்து வருடங்கள் வரை மகிந்த ராஜபக்ச சுத்திகரிப்பில் ஈடுபட அனுமதித்தன. ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள், ஏகாதிபத்திய எதிப்பாளர்கள், இடதுசாரிகள் போன்ற மக்கள் நலனில் அகறை கொண்ட அனைவரையும் அழித்துச் சுத்திகரித்த மகிந்த ராஜபக்ச அரசிற்கு ஆயுதங்களும் ஆலோசனைகளும் வழங்கிய ஏகாதிபத்தியங்கள் பின்னதாக மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு வழங்கின.

போரின் பின்னதாக அதன் வெற்றிகளைத் தூய்மைப்படுத்தும் அரசியல் மைத்திரி – ரனில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் மறுபக்க்த்தில் போர்க்குற்ற விசாரணையை அமெரிக்காவே நடத்தி தமிழர்களுக்கு நீதிபெற்றுத் தரும் என்ற போலிப் பிரச்சாரம் புலம்பெயர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டது. இப் பிரச்சாரங்கள் ஊடாகக் கடந்த ஆறு வருடங்களில் மக்களை விரக்திக்குள்ளாக்கிய புலம்பெயர் அமைப்புக்கள் ஏகாத்பத்தியங்களுக்கு மக்களைக் காட்டிக்கொடுத்தன.

இன்று அழித்த சர்வதேச நாடுகளிடமே சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று கோரி பத்து அப்பாவிகள் புடைசூழ சிவஜிலிங்கமும் அனந்தி சசீதரனும் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு கையெழுத்துத் திருவிழா நடத்திக்கொண்டிருக்கின்றது. இவை அனைத்திலுமிருந்து அன்னியப்படுத்தப்பட்ட மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.

சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு ஆதரவாக ஐரோப்பா முழுவதும் பெருந்திரளாக மக்கள் போராடுகின்றனர்.

தமிழ்ப் பேசும் மக்களின் நியாயமான போராட்டம் அதிகாரவர்க்கம் சார்ந்த போராட்டமாகக் முன்னெடுக்கப்பட்டதால் உலகம் முழுவதிலுமுள்ள மனிதாபிமான, ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒதுக்கி ஓரம்கட்டப்பட்டன.

அமெரிக்கா போன்ற வரலாற்று வழிவந்த கொலைகார அரசுகளின் நலன்களுக்காகவே தமிழர்கள் போராடுகிறார்கள் என்ற விம்பம் உலக மக்களுக்கு வழங்கப்பட்டு போராட்டத்தை துடைத்துச் சுத்திகரித்த தமிழர் தலைமைகள் ஏற்படுத்திய அழிவுலிருந்து மீள்வதற்கான அரசியல் முன்வைக்கப்படும் வரை நாம் ஒரு படி கூட முனோக்கிச் செல்ல முடியாது.

Exit mobile version