Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உள்ளகப் பொறிமுறையா சர்வதேச விசாரணையா?

mahindaRஇலங்கை அரசுடனேயே பேசி அவர்களே விசாரணை நடத்துமாறு சுமூகமான போர்க்குற்ற விசாரணை ஒன்றை யாருக்கும் பாதிப்பில்லாமல் செய்யுங்கள் என்று சர்வதேச நாடுகள்  கூறுகின்றன. இந்த சர்வதேச சமூகத்தின் தலைமைப் பதவியில் அமெரிக்க அரசே காணப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் பலர் இலங்கை அரசே அதன் போர்க்குற்ற விசாரணைய நடத்தக்கூடாது, அது சர்வதேச விசாரணையாக அமைய வேண்டும் என்கிறர்கள். நியாயமான கருத்துத் தான். இனப்படுகொல நடந்த போது போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொள்வது நியாயமாகாது என்பது உண்மையே.

உலகின் போர்க்குற்றங்கள் இழைப்பதில் தாத்தாவான அமெரிக்க அரசு இலங்கை அரசை விட மேலானது என்று கருதி இவர்கள் சர்வதேச விசாணை வேண்டும் என்கிறார்கள்.

போர்க்குற்றங்களின் தாத்தாவோ தன்னை விட இலங்கை அரசு அதனைச் சிறப்பாகச் செய்யும் எனச் சான்றிதழ் வழங்குகிறார்.

உலகம் முழுவதும் மனித் உரிமை மீறல்களை நடத்திய அமெரிக்காவின் நோக்கம் எப்போதுமே போர்க்குற்றங்களுக்காக இலங்கையைத் தண்டிப்பதல்ல. தனக்குச் சார்பான ஆட்சியை ஏற்படுத்துவதற்கே அமெரிக்கா போர்க்குற்ற விசாரணை என்று கூச்சலிட்டது.

புலம்பெயர் தலைமைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், கஜேந்திரகுமார் குழுவும் இதனைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொண்டே நாடகமாடினார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகம் அரங்கேறும். அதனூடாக சில அரச அதிகாரிகளும் பல புலிகள் இயக்கப் போராளிகளும் தண்டிக்கப்படுவார்கள்.
அதன் பின்னர் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவார்கள்.

போர்க்குற்ற விசாரணை என்ற நாடகம் ஆரம்பிக்கப்பட்ட போதே இனியொரு.. உட்பட பலர் இது குறித்து எச்சரித்திருக்கிறார்கள். அவ்வேளையிலெல்லாம் அவர்கள் துரோகிகளாக்கப்பட்டார்கள்.

சாத்தியமற்ற ஒன்றை வைத்து ஆறு வருடங்களைக் கடத்திவிட்டார்கள். இப்போது வேறு அரசியல் வழிகளின்றி வெற்று விவாதங்களை நடத்திக்கொண்டிருக்கிறர்கள். காற்று வெளியில் இவர்கள் போடுகிற வெற்றுக் கூச்சல்கள் பயனற்றவை.

இன்றும் சர்வதேச விசாரணையா உள்ளக விசாரணையா என்று அனல் பறக்கும் விவாதங்களை நடத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர் அரசியல் கோமாளிகள் உண்மையைப் புரிந்துகொள்ளும் தூரம் இன்னும் தொலைவிலேயே உள்ளது.

Exit mobile version