Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கம் கோரும் போராளிகளும் பிரபாகரனும் புலம்பெயர் மாவீரர்கள் பட்டியலில் இல்லை

vpதமிழீழ விடுதலைப் புலிகளில் மரணித்த போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாள் புலம்பெயர் நாடுகளில் ‘கோலாகலமாக’ பெரும் பணச் செலவில் கொண்டாடப்படும் அதே வேளை அந்த நாளை அனைத்துப் போராளிகளின் நினைவு நாளாக மாற்ற வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“பல போராட்ட அமைப்புகள் எமது மக்களின் விடுதலைக்காக போராடியுள்ளன. கொள்கைகள் வேறாக இருந்த போதிலும் தமது உயிரைத் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளும் இம்மக்களை நேசித்தவர்களே. குறிப்பிட்டதொரு அமைப்பிலிருந்து மக்களுக்காக உயிரைத் துறந்த போராளிகளை கார்த்திகை மாதத்தில் நினைவு கூர்வது போன்று ஏனைய அமைப்புகளிலிருந்து போராடி உயிரைத் துறந்த போராளிகளையும் மற்றும் யுத்தத்தில் மரணித்த மக்களையும் நாம் நினைவு கூர வேண்டும். “

என்று தனது அறிக்கையில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரன் மீண்டு வந்து போராடுவார் என புதிய அரசியல் தலைமைகள் தோன்றாமல் தடுத்துவந்த புலம்பெயர் பினாமிகளும் அவர்களின் ஆலோசகர்களும் தமது மாவீரர் வியாபாரத்தை தடையின்றி நடத்திவருகின்றனர்.

பிரபாகரனைப் புகழ்பாடியே முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச்சென்று கொன்றொழித்த அதே முகங்கள் மாவீரர் தினத்தில் பிரபாகரனை நினைவு கூர்வதில்லை. போராட்டத்தையும் புதிய அரசியலின் தோற்றத்தையும் கடந்த ஆறு ஆண்டுகளாக தடைப்படுத்தி வைத்திருந்த இந்த அமைப்புக்களைப் பொறுத்தவரை போராளிகள் பொன் முட்டை போடும் வாத்துக்கள்.

Exit mobile version