Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவுஸ்திரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராகப் போராட்டம்: மாற்றம் சாத்தியமானதா?

சுமந்திரன் அதிகாரவர்க்க அரசியலின் தமிழ்ப் பிரதிநிதி என்பதில் எந்தச சந்தேகமும் கிடையாது. சுமந்திரன் மட்டுமல்ல தமிழ்த்தேசிய அரசியலின் வரலாற்றின் பெரும்பகுதி வலதுசாரி அதிகாரவர்க்கம் சார்ந்தே நகர்ந்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருந்தாலும் அதன் உள்ளடக்கம் ஏகாதிபத்தியங்களுக்கும், உள்ளூர் அதிகாரவர்க்கத்திற்கும் தீனி போடுவதாகவே அமைந்திருந்தது. சுமந்திரன் அதன் வெளிப்படையான பிரதிநிதியே தவிர வேறில்லை.

கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை சுமந்திரன் உட்பட்ட அதிகாரவர்க்கம் உள்வாங்கிக்கொண்டு அவற்றைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

கடந்தகாலத்தை விமர்சன அடிப்படையில் அணுகி புதிய அரசியல் முன்வைக்கப்படும் வரை இன்றைய சூழல் சுமந்திரனுக்குச் சார்பாகவே அமையும்.

இன்று புலம்பெயர் நாடுகளில் மக்களின் பணத்தைச் சுருட்டிய சிறிய விரல்விட்டு எண்ணக்கூடிய குழுவினரே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமது பணத்தைப் பாதுகப்பதற்கான அரணாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இவர்கள் சுமந்திரன் மீது முன்வைக்கும் வன்முறைகளும், விமர்சனங்களும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக சுமந்திரன் போன்ற கொடியவர்களின் பலத்தை ஈழ மக்கள் மத்தியில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

கடந்த காலத்தில் தவறுகள் நடந்துள்ளன அதனை இலங்கை அரசிற்கும் இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ள சுமந்திரனுக்கு எந்த உரிமையும் கிடையாது. மக்களதும், போராளிகளதும் தியாகங்களை சுமந்திரன் போன்றவர்கள் தாம் சார்ந்த வர்க்கத்தின் இருப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதன் மறுபக்கத்தில் தவறுகளை மூடி மறைத்து தமது சொந்த வயிற்றுப் பிழைப்பிற்காக விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள் சுமந்திரனுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் நடந்துகொள்கின்றன.

தவறுகளை நேர்மையாக விமர்சித்து விடுதலைக்கான போராட்டத்தை புதிய கட்டத்தை நோக்கி வளர்த்தெடுப்போம் எனக் கூறும் அரசியலுக்கான அடிப்படை தோன்றும் வரை சுமந்திரன் வாழ்வார். சுமந்திரனை புலம்பெயர் பிழைப்புவாதிகள் வாழவைப்பார்கள்.

அவுஸ்திரேலியவில் சுமந்திரனுக்கு எதிராகச் சிறிய அடிப்படைவாதிகளின் குழு ஒன்று வன்முறையில் ஈடுபடத்து தொடர்பாக இப் பதிவு எழுதப்பட்டது.
சுமந்திரனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்:

Exit mobile version