Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்சில் சமூகவிரோத பாசிஸ்டுகள் அமோக வெற்றி

மரியான் லூ பென்
மரியான் லூ பென்

தேசிய முன்னணி – பிரான்ஸ் நாட்டின் பாசிசக் கட்சி!வெளிநாட்டுக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் நிறவாதக் கட்சி ! பிரான்சின் பிரதேச சபைத் தேர்தலில் ஏனைய அனைத்துக் கட்சிகளிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று முதலாவது சுற்றில் வெற்றிபெற்றுள்ளது. ஜோன் மரி லூ பென் என்ற இரணுவ அதிகாரியால் உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி தனது ஆரம்பம் முதலே வெளிநாட்டவர்களுக்கும் இடதுசாரித்துவத்திற்கும் எதிரான அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகிறது.

தமிழனை கடலுக்குள் தள்ளிக் கொலை செய்யவேண்டும் என சிங்கள பௌத்த வெறியர்களும், தமிழனின் காலில் செருப்புத் தைப்போம் என ஆரம்பித்து சுயநிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை இனவாதமாக மாற்றிய தமிழ் இனவாதிகளும் இலங்கையின் பின் தங்கிய சூழலில் மட்டும் காணப்படுவதில்லை. பிரான்ஸ் போன்ற தொழில் புரட்சி ஊடாக வளர்ச்சியடைந்த நாடுகளிலும் தேசிய வெறியர்கள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறமுடியும் என்பதை பிரான்ஸ் தேசிய முன்னணியின் வெற்றி கூறுகிறது.

பிரான்சில் அமைதியாக வாழும் முஸ்லீம்களை நாசிகளுக்கு இணையனவர்கள் என்று அழைத்த தேசிய முன்னணியின் இன்றைய தலைவரும் ஜோன் மரி லூ பென் இன் புதல்வியுமான மரியான் லூ பென் ஐ பிரஞ்சு அதிகாரவர்க்கம் ஆதரித்தது. பிரான்ஸ் நாட்டின் கறுப்பின அமைச்சர் ஒருவரை மனிதக் குரங்கு என விழித்த மரியான் லூ பென் இற்கு எதிராக இன்றைய சோசலிசக் கட்சியின் வலதுசாரி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மனிதர்களுடன் ஒப்பிட முடியாத கறுப்பினத்தவரையும் வெள்ளையினத்தவரையும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் போட்டியிட அனுமதிப்பது தவறானது என வாதிட்டவர் ஜோன் மரி லூ பென்.

தேசியம் என்ற கருத்த அவதானமாகக் கையாளப்படாவிட்டால் அது வலதுசாரி பாசிசமாக மாற்றமடைந்துவிடும் என்பதற்கு பிரான்சின் தேசிய முன்னணி மற்றொரு உதாரணம். இன்று பிரான்சின் அறிவு சீவி வர்க்கம் ஒன்று லூ பென் குடும்பத்தை நியாயப்படுத்த கிளம்பியிருக்கிறது. “மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள், பிரான்சின் கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள், புனிதமானவர்கள்” என்று ஆரம்பித்து பிரான்சின் தேசியத் தலைவர் லூ பென் என்கிற அளவிற்கு தேசிய முன்னணியை நியாயப்படுத்தும் அருவருப்பான அதிகாரவர்க்க அறிவியல் கிரிமினல்கள் தோன்றியுள்ளனர்.

இதுவரை போலி இடதுசாரிக் கட்சிகளுக்குக் கூட வாக்களிக்க மறுக்கும் ஈழத் தமிழர்களின் இடதுசாரி எதிர்ப்பு லூ பென் போன்றவர்களை வளர்ப்பதற்குப் பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

ஒரு தசாப்தத்தின் முன்னர் லூ பென் போன்ற பயங்கரவாதிகளை பிரான்சின் அவமானமாகக் கருதிய பிரஞ்சு மக்கள் இன்று தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள்! தம்மையும் அழிக்கும் பாசிசத்தின் காவலர்கள்.!

ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ ஏவி 130 பிரஞ்சு மக்களைப் படுகொலை செய்த அதிகாரவர்க்கம், லூ பென் குடும்பத்தையும் வளர்த்துவிட்டிருக்கிறது. ஊடகங்கள் இதற்குத் துணை போயின. மக்களுக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டு பிரான்ஸ் நாட்டை ஐரோப்பாவின் அவமானச் சின்னமாக மாற்றியிருக்கிறது.

Exit mobile version