தென்னித்திய சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்து இலங்கைக்குச் சென்று சினிமாக் கவிதைகள் பேசியமை இன்றைய தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்தி. ஈழத்துக் கவிதை மரபு ஒன்றிருந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்க கடந்து போக முடியாத காலம் ஒன்று உள்ளது. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து ஈழத்தில் கவிதை பாடவேண்டிய அவலத்துள் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வட மாகாணசபயில் பல்தேசிய நிறுவனங்களின் ஊழலின் ஊற்றுமூலமாகத் திகழும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் அழைப்பின் பேரில் இலங்கை சென்ற வைரமுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
2009 இல் வன்னிப் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த் வேளையில் கருணாநிதிக்காகக் கவிதைபாடிய வைரமுத்து, இன்று ஈழத் தமிழர்களின் துயரத்தை மாகா காவியமாக எழுதுவேன் என்று முல்லைத்தீவில் முழங்க அதனை தமிழ்த் தேசியக் கோமாளிகள் சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பெருமையாகப் பேசி மகிழ்கிறார்கள்.
இதற்கு நடுவே ஐங்கரனேசன் மற்றும் விக்னேஸ்வரன் அமைத்த போலி நிபுணர்குழுவால் அடிப்படை வசதிகளைக் கூட இழந்து வாழும் மக்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டமும் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன், சட்டத்தரணி தேவராசா உட்படப் பலர் உரையாற்றிய இந்த நிகழ்வு அவலங்களுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதி.
வைரமுத்துவை அழைத்து இந்திய சினிமாக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் ஐங்கரனேசன் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் மில்லியன்களை வாங்கிக்கொண்டு மக்களை மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளிய பேரழிவிற்கு எதிரான இந்த நிகழ்வில் சுன்னாகம் மக்களும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய பொறியியலாளர் சூரியசேகரம் போராட்டம் தொடரும் என்றார்.
“முகவரி அழிக்கப்பட்ட மக்களின் இரத்தத நாளங்களின் நஞ்சை உற்றிவிட்டு வன்னி மண்ணில் கவிதை அல்லவா பாடிக்கொண்டிருக்க்கிறார்கள்? கிடுகு இடுக்குகளைக் கடந்து அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது கிறீசையும், ஒயிலைம் பற்றியா பேசிக்கொள்வார்கள்??”