கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த வெளி நாட்டுப் பிரதிநிதிகளில் ரனில் முக்கியமானவர். சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்தி யாழ்ப்பாணத்தில் அழிவுகளை ஏற்படுத்திய எம்.டி.ரி வோக்கஸ் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமான நிராஜ் தேவா என்பவர் ரனிலின் நெருங்கிய நண்பர்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெற்ற வேளையில் நிர்ஜ் தேவாவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் அப்போதைய பிரித்தானிய வெளிவிகாரச் செயலாளரும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிகால உறுப்பினருமான வில்லியம் ஹக் ஐ சந்திரிக்கா குமாரணதுங்கவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் ரனில்.
ரனில் விக்ரமசிங்கவின் நடை, உடை, அரசியல் விழுமியங்கள் என்ற அனைத்திலுமே மேற்கு ஏகாதிபத்தியங்களின் சின்னங்களைக் காணலாம்.
ரனிலைப் போன்ற மிக நம்பிக்கையான பிரதிநிதி மேற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கு மூன்றமுலக நாடுகளில் கிடைப்பது அரிது.
மெக்சிகோவை பிச்சைக்கார நாடாக மாற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த வின்சென்ட் பொக்ஸ் இற்கு பிரதான பாத்திரமுண்டு. உலகின் ஒன்பதாவது பெரிய பெற்றோலிய உற்பத்தி நாடான மெக்சிக்கோவின் எல்லைப் புறங்களிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
அமெரிக்கா தேர்தல் என்ற தலையங்கத்தில் தமது அடியாட்களை மெக்சிகோ மற்றும் தென் சூடான் போன்ற நாடுகளில் நியமித்த போது மக்கள் குதூகலித்தார்கள்.
சில வருடங்களுகு உள்ளாகவே அவை அமெரிக்காவும் அதன் பல்தேசிய வியாபார நிறுவனன்களும் அந்த நாடுகளை ஒட்டச் சுரண்டிக்கொண்டன.
இலங்கையில் ரனில் அரசு மத்திரி என்ற சோளக்காட்டுப் பொம்மையுடன் இணைந்து நடத்தப் போகும் ஆட்சி இலங்கையில் மற்றொரு அழிவின் ஆரம்பமே.
கடந்த காலத்தைப் போலன்றி, மகிந்தவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான குரல் என்ற அடிப்படையில் இலங்கையில் அதிகாரவர்க்கத்திற்கு எதிராகக் குரலெழுப்பக் கூடிய பெரும்பாலனவர்களை மைத்திரி-ரனில் அரசு தனது ஆதரவாளர்களாக்கிக் கொண்டது.
அதேவேளை மகிந்த நடத்திய பேயாட்டத்தில் உளவியல் பாதிப்புக்கு சிங்கள மக்களில் பெரும்பகுதினர் உள்ளாக்கப்பட்டுள்ளனர். மிக நீண்டகாலத்திற்கு ரனில் அரசிற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இதுவே போதுமானது,
எது எவ்வாறாயினும் சிங்கள மக்கள் ரனில் ஏகாதிபத்திய சார்பு கொள்ளை ஏற்படுத்தும் அழிவுகளுக்கு எதிராகப் போராடத் தலைப்படுவார்கள் அவ்வேளையில் மீண்டும் பேரினவாதம் தூண்டப்படும்.
இன்று ரனிலின் வரவால் கிடைத்திருக்கும் தற்கால ஜனநாயக இடைவெளியப் பயன்படுத்தி பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரம் குறித்து சிங்கள் மக்களுடன் பேசத் தவறினால் மிண்டும் அழிவுகள் தவிர்க்கமுடியாதாகிவிடும்.
Ranil Wickremesinghe, Former Prime Minister of Sri Lanka, Joins MIT