Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

1972 இற்குப் பின்னர் முதல்தடவையாக இலங்கை செல்லும் அமெரிக்க அரசுச் செயலர்: ஆசியாவின் அபாயம்

jkஅமெரிக்க அரசதுறைச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் சனி மே மாதம் 2ம் திகதி 24 மணி நேரப் பயணம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளதாக சண்டே லீடர் ஊடகம் தெரிவித்துள்ளது. 1972 ஆம் ஆண்டு அரச துறைச் செயலாளர் ஒருவர் இலங்கை சென்ற பின்னர் இதுவே முதலாவது உத்தியோகபூர்வப் பயணம். இதற்கு முன் நூறு நாள் திட்டத்தில் வியக்கத் தகுந்த முன்னேற்றத்தை இலங்கை அரசு எட்டியுள்ளதாக ஜோன் கெரி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் கேரியின் பயணமும் கருத்துக்களும் அமெரிக்காவிற்குத் தேவையானதை இலங்கை அரசு வழங்குகிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது. வன்னிப் படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்க அரசு இன்று இலங்கையை ஆசியாவின் ஆபத்தாக மாற்றிவருகிறது. நல்லாட்சி,ஜனநாயகம், மனித உரிமை என்று படம் காட்டிக்கொண்டு இலங்கையைச் சூறையாடுவதிலும் வடக்குக் கிழக்கை இராணுவ மையங்களாக மாற்றுவதிலும் அமெரிக்க அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்திய ஏஷியா பைவோட் என்ற புதிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைச் செயற்படுத்த ஆரம்பித்த பின்னர் அதன் மையப்பகுதியாக இலங்கை செயற்படுகிறது.

Exit mobile version