Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகிறார்கள் அமெரிக்கா அறிக்கை:ஒட்டுக்குழுக்கள் எங்எங்கே?

ltte_diasporaதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான சர்வதேச தீவிரவாத அறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டிருந்தது.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குகிறது. அவர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின் போது இலங்கை பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து அமெரிக்கை கண்டனம் தெரிவித்திருந்தது. எனினும் புதிய அரசாங்கம் குறித்த சட்டத்தை தளர்த்துவதாக உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் நடுப்பகுதியில் எரிக் சோல்கெயிம், போர்க்குற்றம் இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் இரு தரப்பும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்திருந்தார். பின்னதாக புலம்பெயர் அமைப்புகள் பலமுடியவை எனவும் அவற்றை நாட்டின் அபிவிருத்திகாகப் பயன்படுத்த வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அதன் பின்னர் உலகத்தமிழர் பேரவை இந்த இருவரையும் தன்னார்வ நிறுவனங்கள் புடைசூழ சந்தித்தது.

ஆக, தன்னார்வ நிறுவனங்கள் போன்று மாற்றமடைந்து இலங்கை அரசுடன் இணைந்து செயற்படாத அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவதே இதன் பின்புலத்திலுள்ள நோக்கம் என இனியொரு எதிர்வு கூறியிருந்த நிலையில் அமெரிக்காவின் அறிக்கை வெளிவந்துள்ளது.

ஈழப்போராட்டத்தை அழிப்பதற்குத் துணை போன அதே புலம்பெயர் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்கள் முழுத் தமிழ்ப் பேசும் மக்களையும் காட்டிக்கொடுத்து போராட்டத்தை அழித்துள்ளன. வலதுசாரி ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்கள் அமெரிக்கா போர்க்குற்றத்திற்காக ராஜபக்சவைத் தூக்கிலிடும் என்றும், அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் போன்றன தமிழர்களின் ஆதரவாளர்கள் எனவும் கூறி மக்களை ஏமாற்றின.

உலகின் பயங்கரவாத அமைப்புக்களில் புலிகளும் ஒன்று எனவும் அதன் வலையமைப்பு புலம்பெயர் நாடுகளில் செயற்படுகிறது என்றும் அமெரிக்கா தெரிவிக்கிறது. இனியாவது, தமிழ்ப் பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்து, ஏமாற்றி எஞ்சியுள்ள போராட்டத்தையும் அழித்தமைக்காக புலம்பெயர் ஒட்டுக்குழுக்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்பார்களா?

லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?
இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)
லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன, சுரேஷ் கேட்பது நியாயமானதா?
திரைமறைவுச் சந்திபுத் தொடர்பாக சுரேன் சுரேந்தர் : விற்பனைக்கு விடப்பட்டுள்ள போராட்டம்
புலம்பெயர் அமைப்புக்களைக் குறிவைக்கும் இலங்கை அரசு: மறுப்புக்கள் இல்லை!!

 

Exit mobile version