80 களில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதே அது இந்திய மற்றும் அமெரிக அழிவு அரசுகளால் பயன்படுத்தப்பட்டது. சிறிது சிறிதாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடியான கண்காணிப்பிற்குள் போராட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் தோற்றதாக வரலாறில்லை. சீனாவில் மாவோ சேதுங்கும் அவரது தோழர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் இராணுவத்தை ஒழுங்கமைப்பது தொடர்பன நவீன முறையை உலகத்திற்கு வழங்கியிருந்தனர். அதனைப் பின்பற்றிய வியட்னாமியப் போராட்டம் அணுவாயுதங்களோடு யுத்தம் செய்த பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஆகிரமிப்புப் படையை புறமுதுகு காட்டி ஓடச் செய்தது. இன்று பிலிப்பைன்ஸ் கெரில்லாக்களை அமெரிக்கப் படைகளால் கூட அணுக முடியவில்லை. இந்திய அரசின் கொல்லைப் புறத்தில் நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் மன்னராட்சியை அழித்துத் தலை நகரைக் கையகப்படுத்தியது.
ஆக, தெளிவான அரசியல் வழிமுறையும் அதன் வழியில் கட்டமைக்கப்பட்ட மக்கள் இராணுவமும் இல்லாமை புலிகளை அழிப்படக்கூடிய இயக்கமாகவே பேணி வந்தது. ஏகாதிபத்தியங்கள் அழிப்பின் வழிமுறையைத் தமது எதிர்கால நலன்களுக்கு ஏற்பவே திட்டமிட்டன. மக்கள் அழிவில்லாமல் புலிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தால் போராட்டம் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிராது. ஆக, இலகுவில் அழிக்கப்படக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை பேரழிவின் ஊடாக அழித்தமைகான காரணங்கள் தெளிவானவை. அவ்வாறான கோரமான அழிப்பின் பலனை இன்றைய அமெரிக்கத் தீர்மானம் அறுவடை செய்திருக்க்றது.
ரனில் விக்ரமசிங்க இப்போது போர்க்குற்றங்களுக்குப் புலிகளே பொறுப்புக்கூற வேண்டும் என பேரினவாதத்திற்குத் தீனி போட்டிருக்கிறார். கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தடைகள் விதிக்கப்படும், யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டிக்கப்படுவர் ஆகிய அச்சத்திலிருந்து நாட்டு மக்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆக, அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானம் இலங்கையில் பேரினவாதக் கோட்பாட்டை வளர்த்து சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையை ஆழப்படுத்தும் என்பது தெளிவானது.