இலங்கை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய புள்ளியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குற்றச் செயல்களுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் ஊடாக இலங்கை சர்வதேச அரங்கில் தனது பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இலங்கை அரசின் பின்புலத்தில் அமெரிக்க அரசு செயற்படுகின்றது. அமெரிக்க அரசின் தொங்கு தசைகள் போன்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் செயற்படுகின்றன. ஆக, இந்த அமைப்புக்கள் இலங்கை அரசின் முகவர்கள் போன்றே செயற்படுகின்றன. எதிர்கால சந்ததியின் எதிர்காலத்தோடும், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களோடும் தமது ஏமாற்று விளையாட்டை நடத்தும் அமைப்புக்களில் பிரதானமானவை பீ.ரீ.எப் மற்றும் ரீ.சீ.சீ ஆகிய அமைப்புகளைக் குறிப்பிடலாம்.
இந்த அமைப்புக்களின் விபரீத அரசியல் இலட்சக்கணக்கன உயிர்களைக் காவுகொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிக்கத் துணை போயிள்ளது. இன்று போர்க்குற்ற விசாரணையும் ஈழக் கனவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்றும் தமிழ் மக்களை மந்தைகள் போன்று இதே அமைப்புக்கள் நடத்திவரும் அதே வேளை இலங்கையில் மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பீ.ரீ.எப் மற்றும் ரீ.சீ.சீ போன்ற ஒட்டுக்குழுக்கள் ஒரு சமூகத்தையே அழித்த தமது நடவடிக்கைகளுக்காக மக்களிடம் மன்னிப்புக்கோருவதுடன் மட்டுமன்றி அரசியலிலிருந்து விலகிக்கொண்டாலே புதிய மக்கள் பற்றுள்ள தலைமைகள் தோன்ற வாய்ப்புண்டு.