Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ‘நல்லாட்சி’ பாராளுமன்றத்திற்கு அமெரிக்கா பண உதவி

USA_Sri-Lanka_Flag‘நல்லாட்சி’ என்று கூறிக்கொள்ளும் இலங்கை அரசின் பாராளுமன்றத்திற்கு அமெரிக்க அரசு பண ஒதுக்கீடு செய்துள்ளது.பாராளுமன்றத்தின் அதிகாரமட்ட ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக இந்தப் பணம் வழங்கப்படுவதாக அமெரிக்காவின் அரச துறை நிதிவழங்கும் நிறுவனமான USAID அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 50 உயர்மட்ட ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

73 மில்லியன் ரூபாக்களை இத் திட்டத்திற்கு அமெரிக்க அரச நிறுவனம் ஒதுக்கியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் பொதுவாக எல்லாத் துறைகளிலும் தலையிடும் இந்த நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் பண உதவிகளை வழங்கி தமது கண்காணிப்பிற்குள் உட்படுத்தி வருகின்றது. மத்திய கிழக்கில் இரத்தக்களரியை ஏற்படுத்திய பின்னர் ஆசியாவில் மையம் கொள்ளும் தனது கொள்கையை அமெரிக்க அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதன் பிரதான பகுதியாக அமெரிக்க அடியாள் அரசான இலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் எதிர்த் தரப்புக்களாகக் கருதப்படும் சீ.வீ.விக்னேஸ்வரனைச் சுற்றியுள்ள குழுக்களும் அமெரிக்க அரசின் ஆணையின் கீழேயே செயற்படுகின்றன.

இதன் மறுபக்கத்தில் தொடர்ச்சியாக தமிழ்ப் பேசும் மக்களை அழித்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கைக்கூலிகளாக புலம்பெயர் அமைப்புக்கள் செயற்பட்டு தமிழின அழிப்பிற்குத் துணை செல்கின்றன.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அமெரிக்க அரசின் ஊடாக இலங்கை அரச பேரினவாதிகளின் பிடியில் ஒப்படைத்த கைங்கரியத்தை போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்திய செயல் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூற ஆரம்பித்துள்ளன. அழிக்கப்பட்ட மக்களை மேலும் அழிவுகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளைப் புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவருகிறது.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக இன்றைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க அரசின் ஏற்பாட்டின் கீழ் பல்கலைக் கழகத்தில் ஆறுமாதகால பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவில் ரனில் பயிற்றப்பட்டதற்கான ஆதாரம்
Exit mobile version