Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகில் அதிகமாகக் கொத்துக்குண்டுகள் வீசப்பட்ட நாடும் புதிய குறியும்

bomb-map23உலக வரலாற்றில் அதிகமாகக் கொத்துக்குண்டுகளால் அழிக்கப்பட்ட நாடு லாவோஸ். தொடர்ச்சியாக அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் லாவோஸ் தொடர்ச்சியாக 9 வருடங்கள் கொத்துக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் முதியோர்கள் என ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் வீசப்பட்ட கொத்துக்குண்டுகளின் வாரந்த பெறுமானம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள். கடந்த ஆறாம் திகதி லாவோஸ் நாட்டில் பயணம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அந்த நாட்டில் வெடிகுண்டு எச்சங்களை அகற்றுவதற்காக 90 மில்லியன் டொலர்களை எதிர்வரும் மூன்று வருடத்தினுள் வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஒரு வாரத்தில் ஏற்படுத்திய கொலை அழிவுக்கான பணத்தைவிட குறைவான தொகையை வழங்கிவிட்டு இன்று மனிதாபிமானம் என மார்தட்டிக்கொள்கிறது.
இப்போது அமெரிக்காவின் கொலைக் கண்கள் யேமென் நாட்டின் மீது பதிந்துள்ளது. அந்த நாட்டில் கொத்துக்குண்டுகளைக் கொட்டுவதற்காக சவுதி அரேபியாவிற்கு 1.5 பில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

90 மில்லியன்கள் அமெரிக்க அதிகாரவர்க்கத்தின் கொலை வெறியின் நிவாரணம் 1.5 பில்லியன் கொலை வெறியைத் தூண்டுவதற்கான கொடுப்பனவு.

லாவோசின்மீது நடத்தப்பட்ட யுத்தம் இரகசியமானது என ஒப்புக்கொள்ளும் ஒபாமா, இன்று அதனை மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை உணரப்படுகிறது என்கிறார். யேமன் நாட்டின் மீது குண்டுகளால் துளைத்து மனித உயிர்களை மண்ணோடு மண்ணாக்கிவிட்டு இன்னும் சில வருடங்களில் மன்னிப்புக் கோரலாம்.
யேமென் நாட்டில் சவூதி அரேபிய சர்வாதிகாரிகள் ஊடாக அமெரிக்க நடத்தும் கொலை வெறியாட்டத்தில் கொல்லப்படும் அப்பாவிகள் ஆசியாவில் உருவாக வாய்ப்புண்டு.

Exit mobile version