Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் பல்கலைக் கழக்தின் ஐ.நா, அமெரிக்கா, இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரன போராட்டம்

warcrime1ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு இன்று-24.02.2015- அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். பல்கலைக் கழக சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
வன்னி இனப்படுகொலையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டமாக இது கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தது.

பாராளுமன்றத் தேர்தலை நோக்கமாக முன்வைத்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதுடன் போராட்டத்திலும் பங்குபற்றினர்.

அமெரிக்க ஆதரவோடு அமெரிக்காவின் நலன்களுக்காக முன் மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா குழு மேற்கொண்ட விசாரணைக்கான அறிக்கை இன்று அமெரிக்காவினால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு ஆதரவான நிலை தோன்றும் என்பதே மைத்திரி – ரனில் அரசும் அமெரிக்க அரசும் கூறும் நியாயம்.

ஒரு தேசிய இனத்தின் ஒரு பகுதியை அழித்த கோரம் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு பெருகும் என்ற கொச்சைத்தனமான நியாயத்தை அமெரிக்க ஏகாதிபத்தியமும் இலங்கை அரசும் முன்வைக்கின்றன.
இது வரைக்கும் அமெரிக்காவின் எடுபிடிகள் போன்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய அரசியல் வழி முறை எதனையும் முன்வைக்காமல், சுய விமர்சனமின்றி மக்கள் மத்தியில் நிர்வாணமாக நின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் மத்தியில் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாகவிருந்தது.

ஐ.நா மற்றும் அமெரிக்கா போன்றவற்றின் உண்மையான கோர முகத்தை மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றையே மேலும் நம்பக் கோரும் இனவாத அரசியலை முன்வைக்கும் கஜேந்திர குமார் குழுவினர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைத் திசைதிருப்ப முயன்றனர்.

10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான போராட்டம், பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது. சிங்கள மாணவர்களும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டமை புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்து. ஐ.நாவிடம் கையளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத குருக்ககள் ஊடாக ஐ.நாவிடம் சேர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டது.

இராணுவம், போலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

உலகின் அழகிய மூலை ஒன்றினுள் குழந்தைகள், முதியோர் என்று பாகுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டு அழிக்கப்பட்ட பின்னர், அந்த அழிப்பிற்கான நீதிபதியாக அழிப்பை நடத்திய அமெரிக்காவை நியமித்த அரசியல் வாதிகளே இன்றைய நிலைக்குக் காரணம். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அமெரிக்காவின் உளவுப்படைகைளை நிராகரித்து மக்கள் மத்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். சிங்கள் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் மத்தியில் மறைக்கப்பட்ட போராட்டத்திற்கான நியாயம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கான ஆரம்பமாக இப்போராட்டம் அமையுமானால் அது தனது நோக்கத்தைப் பூர்த்திசெய்ததாக அமையும்.

Exit mobile version