யாரும் எதிர்பார்க்காத தொற்று எண்ணிக்கையால் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து மருத்துவமனைகள் எதிர்கொள்ள இயலாத அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. பழமைவாத அரசின் சிக்கன நடவடிக்கைகளால் மருத்துவத் துறைக்கான நிதிக் கொடுப்பனவு கடந்த பத்து ஆண்டுகள் 40 வீதத்தால் குறைக்கப்பட்டமையும், மருத்துவர்கள் தாதிகள் போன்றோரின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் இன்றைய நிலையை எதிர்கொள்ள இயலாத சூழலில் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்பிரல் மாதத்தில் தொற்று ஆரம்பித்த காலத்தைப் போலன்றி பலர் தொற்றுக்கு உள்ளாவது வெளிப்படையான செய்தியாகிவிட்டது. வியாபார மயப்படுத்தப்படுத்தப்பட்ட மருத்துவம், நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான உறுதியான தீர்வை எட்டமுடியாத நிலையிலுள்ளது. அமெரிக்க மருந்து வியாபார நிறுவனங்களுக்கு பங்கு சந்தைகள் ஊடகவும், அரசு நேரடியாகவும், தன்னார்வ நிறுவனங்கள் வழியாகவும் வழங்கிய பெருந்தொகைப் பணம் அந்த நிறுவனங்கள் தடுப்பூசியின் ஊடக எவ்வளவு இலாபத்தைப் பெறலாம் எனக் கணக்கிட்டுக்கொண்டிருக்கும் அதே வேளை, செய்தி நிறுவனங்கள் மரணங்களைக் கணக்கிடுகின்றன.