Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆக்கிரமித்துள்ள நிலங்கள் விடுதலை செய்யப்படுமா எனத் தெரியாது :பாதுகாப்பு செயலாளர் – கட்சிகள் மௌனம்

karunasenaவட-கிழக்கில் இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் அனைத்துக் காணிகளையும் விடுதலை செய்ய முடியுமா எனக் கூறமுடியாது என என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேறுவதற்கான அனுமதி வழங்கும்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசு தான் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை விடுவிக்க முடியாது எனத் திமிராகக் கூறிய சம்பவம் நல்லாட்சி முகமூடியணிந்த ஏகாதிபத்திய அடியாள் முகத்திரையைக் கிழித்துள்ளது. மீள் குடியேற்றம் என்பது படிப்படியாக நடைபெறும் எனத் தெரிவித்த அவர் முப்படைகளும் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

தனது தேவைக்கும் அதிகமான இராணுவத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. பேரினவாத நச்சூட்டப்பட்ட, போர்க்குற்றவாளிகளைக் கொண்ட இராணுவத்தை மக்கள் குடியிருப்புக்களின் மத்தியில் நிறுவியிருக்கும் இலங்கை அரசு மேலும் தனது போர்க்குற்றத்தைத் தொடர்கிறது. இலங்கை அரசு போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க மறுப்பது மட்டுமன்றி அவர்களை அப்பாவி மக்களின் நிலங்களில் குடியேற்றியிருக்கிறது.

அறிக்கைப் போர் நடத்துவதை மட்டுமே தமது தொழிலாகக் கொண்டுள்ள வடக்கை மையப்படுத்திய அரசியல்வாதிகள் இலங்கை அரசின் தொடரும் போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்வைக்கப்போவதில்லை. புதிய மக்கள் சார்ந்த அரசியலை இத் தலைமைகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களில் ஒன்றான நிலம் சார்ந்த உரிமையைக் கூட நிராகரிக்கும் இலங்கை அரசு ‘நல்லிணக்கத்திற்கானதல்ல’ என சிங்கள மக்கள் உட்பட இலங்கை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஐ.நாவிற்குள் நுளைவதற்குக் கூட பசுமைத் தாயகம் என்ற சாதி வெறி மற்றும் அமெரிக்க சார்பு தன்னார்வ நிறுவனமான பசுமைத் தாயகத்தை நம்பியிருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசிற்கு எதிரானவை அல்ல. இலங்கை அரசின் பின்னணியில் செயற்படும் அமெரிக்க ஏகாதிபத்திய அணியே இவர்களின் பின்னணியிலும் செயற்படுகின்றது. இவர்களை நம்பியிருக்காமல் இலங்கையில் புதிய மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கப்படுவதன் ஊடாகவே மக்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்களை எதிர்கொள்ள் முடியும்.

Exit mobile version