Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற அறிக்கை (மேட் இன் அமெரிக்கா) – புஸ்வாணமானது

un_usaஐ.நா மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்ற விசாரணை அறிக்கை எந்தப் பெறுமானமும் அற்றுக் கிடப்பில் போடப்படும் நிலை தோன்றியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் வாழும் இனவாதிகள் தம்மிடம் ஒரு அரசியல் வேலைத்திட்டம் உண்டு என்பதைக் காட்டிக்கொள்வதற்கு ஐ.நாவில் தாம் ராஜபக்சவைத் தண்டித்து தமிழீழம் பிடிக்கப் போகிறோம் என மக்களை ஏமாற்றி வந்தனர். ஐ.நாவைச் சுற்றி ஆதரவாகவும் எதிராகவும் இயங்கிவந்த இனவாதிகளிடம் எந்தக் குறிப்பான வேலைத்திட்டங்களும் இருந்ததில்லை. தமது இலக்கை அடைவதற்கு காலாகாலத்திற்குப் பொய்யான நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்கி மக்கள் மத்தியிலிருந்து தோன்றக் கூடிய புதிய அரசியல் தலைமைகளை அழித்து வந்தனர்.

இன்று நடைபெற்ற ஐ.நா மனித்த உரிமைக் கூட்டத் தொடரில் பேசிய அமெரிக்க அரச துறைச் செயலாளர் ஜோன் கெரி, உள்ளூர் அரசுகளுகு அழுத்தங்கள் வழங்குவதற்காகவே மனித உரிமை பயன்படுத்தப்பட்டது எனக் கூறியுள்ளார்.

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்குக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

பர்மா, சிறிலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவர்களின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை ஊக்குவித்து உண்மையான மாற்றங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பங்காற்றியுள்ளது.

அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை நிச்சயம் மாற்ற முடியும். எனினும் அது ஒரே இரவில் நடந்து விடாது. அழுத்தங்களின் மூலம் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும், சுதந்திரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, இன்று ஆரம்பான ஐக்கிய நாடுகள் சபையின் 28 வது மனிதவுரிமை தொடரின் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கர சமரவீர உரையாற்றியுள்ளார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மனித உரிமை தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரன தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்காவும் இலங்கை அரசும் இணைந்து போர்க்குற்ற ஆவணத்தைக் கிடப்பில் போடுள்ளன.

இதனல் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வேலைத்திட்டம் எனக் கூறிவந்த போர்க்குற்ற விசரணை வலுவற்றதாகிவிட்டது. போர்க்குற்றவாளிகளதும் இனக் கொலையாளிகளதும் கூடாரம் போன்று திகழும் ஐ.நாவில் போர்க்குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை.

இன்று மாற்று வேலைத்திட்டம் அவசியமானது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version