Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மங்களவிற்கு வாழ்த்து:தற்காலிக சமாதான நாடகம்

hugoஇலங்கையில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹூகோ சுவயர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்திற்கும் நல்வாழ்விற்கும் அவருடன் தொடர்ந்து செயற்பட ஆரவத்துடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற போது ராஜபக்சவைத் தூக்கில் போடப்போகிறார் என ஆர்ப்பரித்து மக்களை மந்தைகளாக்கிய புலம்பெயர் அமைப்புக்கள் இன்று தமது நடவடிக்கைகளின் விளைபலனை அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர். முன் நிபந்தனைகளின்றி ஏகாதிபத்தியங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களின் தலைவிதி இன்று தூக்குமேடையில் நிறுத்தப்படுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு முன் காணப்பட்டதைவிட ஆபத்தான சூழல் இன்று திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் நிரகற்ற முகவரான மங்கள சமரவீர பேசும் சமாதானமும் சகவாழ்வும் குறித்த காலம்வரையே நீடிக்கும். ஏகாதிபத்தியங்களின் மூலதனச் சுரண்டல் மக்கள் மீது திணிக்கப்படும் போது, மக்கள் அதற்கு எதிராகப் போராடத் தலைப்படுவார்கள். அவ்வேளையில் பேரினவாத்தைத் தூண்டுவதைத் தவிர இலங்கை அரசிற்கு வேறு வழிகள் இல்லை.

பேரினவாதம் தூண்டப்படும் போது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இனவாதமாக மாற்றி அழிப்பதற்கு தமிழர் தரப்பிலும் ஏகாதிபத்திய முகவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த எதிர்காலச் சூழலுக்கு எதிரான அரசியல் இன்றே முன்னெடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மக்களை மிரட்டிய டேவிட் கமரன் : சுதர்சன்
Exit mobile version