Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய அரசின் புலம்பெயர்ந்த குடியேறிகள் மீதான சித்திரவதை

பிரித்தானியாவில் அகதியாக அங்கீகரிக்கக் கோருவோர் உட்பட சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கருதப்படும் பெண்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் சிறைச்சாலை தான் யார்ல்ஸ் வுட்(Yarl’s Wood). அங்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உட்பட பல்வேறு சித்திரவதைகள் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. மனித உரிமை அமைப்புக்கள் நீண்டகாலமாக இச் சிறை குறித்த தகவல்களை ஆதராபூர்வமாக வெளியிட்டுள்ளன. அருகிலுள்ள நகரங்களுக்கே தெரியாமல் இரகசியமாக நடத்தப்படும் இந்த முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் கோப்ரட் ஊடகங்களால் மறைக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கில் சித்திரவதைகள், அரசியல் படுகொலைகள் போன்றவற்றிற்கு வெகு சாமனியமாக நடத்திவரும் பஹ்ரெயின் அரசு பிரித்தானியாவின் நெருங்கிய நட்பு நாடு. பஹ்ரெயின் நாட்டின் சிறைச்சாலை சித்திரவதைகளுடன் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக சில மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் குரலெழுப்பின. இந்த நிலையில் பஹ்ரெனின் நாட்டின் சித்திரவதையுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் அங்கிருந்து வரவழைக்கப்பட்டு யார்ல் வூட் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற தகவல்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தியுள்ளன.

2013 ஆம் ஆண்டு பா-ரெனின் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்ற அதிகாரிகள் குழுவிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு இடையேயான நெருங்கிய உறவு தொடர்பான குற்றச்சாட்டுகள் பிரித்தானிய அரசை நோக்கி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டும் அந்த நாடு இது குறித்து கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
பஹ்ரெயின் அதிகாரிகள் சித்திரவதை முறைமகள் தொடர்பாகக் கற்றுக்கொள்வதற்காகவே அங்கு அழைத்துவரப்பட்டார்களாக என்ற சந்தேகம் பரவலாக முன்வைக்கபடுகின்றது.

இலங்கையில் STF என்ற விசேட அதிரடிப்படைக்கு பல தசாப்தங்களாக பிரித்தானிய அரசே பயிற்சிகளை வழங்கி வந்தது என்றும் அயர்லாந்து விடுதலைப் போராளிகளை எதிரான யுத்ததில் செயற்பட்ட இரண்டு முக்கிய பிரித்தானிய அதிகாரிகள் வன்னிப் படுகொலைகளின் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார்ல்ஸ் வுட் சிறை தொடர்பான மேலதிக தகவல்கள்:

அகதிகள் சிறைமுகாமைப் பார்வையிட ஐ.நா விற்கு பிரித்தானியா தடை:உரிமை அமைப்புக்கள்

எனது அம்மா அனுபவித்த துயரத்தை கண்ணால் கண்டிருக்கிறேன் : வதைக்கப்படும் அகதிகள்
Exit mobile version