Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய ஏழைகளின் அவலமும் வரவு செலவுத் திட்டமும்

poor and rich in ukபிரித்தானியாவில் மே மாதம் ஏழாம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, அதற்கு முன்பதாக சில வரிக் குறைப்புக்களுடன் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி தனது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஜோர்ஜ் ஒஸ்போர்ண், பிரித்தானியாவில் மக்களின் வாழ்க்கைத்தரமும் வருமானமும் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

The Social Market Foundation என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் தகவல்கள் ஒஸ்போர்ணின் கருத்துகளுக்கு மாறாக அமைந்துள்ளன. பிரித்தானிய பணக்காரர்கள் மேலும் 64 வீதம் அதிக வருமானம் கொண்டவர்களகவும், எழைகள் மேலும் 57 குறைவடைந்த வருமானம் கொண்டவர்களாகவும் மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றது.

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trades Union Congress என்ற மற்றொரு அமைப்பின் ஆய்வறிக்கையில் பல பெண்கள் துப்பரவுத் தொழிலாளர்களாகவும், முடி திருத்துனர்களாகவும், குழந்தை பராமரிப்பாளர்களாகவும் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்க்கின்றனர் எனவும், ஓய்வூதியம் பெற்ற பின்னரும் அவர்கள் வேலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

445,000 பெண்கள் 65 வயதின் பின்னரும் உணவிற்காக வேலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அறிக்கை மேலும் கூறுகிறது.

Exit mobile version