அதே வேளை தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து நியாம்கிரி பழங்குடி மக்கள் வேதாந்தா நச்சு ஆலைகளுக்கு எதிராகப் போராட ஆரம்பித்துள்ளனர். நியாம்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக அங்கு வாழும் பழங்குடி மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர். பழங்குடி மக்களின் தலைவர் லாடோ சீகாகா தெரிவிக்கையில் நமது மலைகளைப் பாதுகாக்க நாம் மரணிக்கவும் தயார் எனத் தெரிவித்தார்.
ஜூன் மாதம் 5 ஆம் திகதி நியாம்கிரியில் வேதாந்தாவிற்கு எதிராக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததனர்.
மோடி அரசு நியாம்கிரி மலைவாழ் பழங்குடிகளின் போராட்டத்தை ஒடுக்க அனைத்து நடவைடிக்ககளையும் மேற்கொள்ளத் தயார் நிலையிலிருகும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. அதே வேளை கடந்த பெப்ரவரி மாதம் வேதாந்தாவின் இரும்புத் தாது தொழிற்சாலையை விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தை கோவா உயர் நீதிமன்றம் நிராகரித்த காரணத்தால் அங்கு 2000 தொழிலாளர்களை வேதாந்தா வேலையை விட்டு நீக்கத் தீர்மானித்துள்ளது.
இந்தியா, தென்னாபிரிக்கா, ஸம்பியா, நமீபியா, ஐக்கிய அரபு ஒன்றியம், அயர்லாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள வேந்தாந்தா, வறிய நாடுகளின் வளங்களைச் சூறையாடி மேற்கு நோக்கி பணமாக மாற்றும் கொள்ளையை பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. மோடி அரசு உருவான பின்னர் வேதாந்தாவின் கொள்ளை உச்சத்தை ந்துள்ளது.